Asianet News TamilAsianet News Tamil

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவதா.? உதயநிதி

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ன உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Udayanidhi urged Amit Shah to stop calling languages other then hindi as regional languages KAK
Author
First Published Sep 14, 2023, 2:57 PM IST

இந்தி திவாஸ் கொண்டாட்டம்

இந்தி தினமான இந்தி திவாஸ் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாக இந்தி உள்ளது. சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி உள்ளது.  வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் இணைக்கப் பயன்பட்டிருக்கிறது. இந்தி எந்த ஒரு மொழிக்கும் போட்டி மொழி கிடையாது என அமித்ஷா தெரிவித்திருந்தார். 

Udayanidhi urged Amit Shah to stop calling languages other then hindi as regional languages KAK

அமித்ஷாவிற்கு எதிராக சீறும் உதயநிதி

இந்த நிலையில் இது தொடர்பாக எக்ஸ் தள பதிவில் பதில் கொடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?

 

இழிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும்

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ன உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

விண்வெளிக்கே சென்றாலும் பெண்களால் குருவறைக்குள் செல்ல முடியாது... அந்நிலை இனி இல்லை! - மு.க.ஸ்டாலின்

Follow Us:
Download App:
  • android
  • ios