Asianet News TamilAsianet News Tamil

நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுங்க ! நைஸாக பேசி காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி !!

நாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்தால் எளிதில் வெற்றி நாங்கள் எளிதாக பெற்றுவிடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
 

Udayanidhi stalin ask nanguneri constituency for dmk
Author
Trichy, First Published Jun 11, 2019, 5:35 PM IST

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா  நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் சிலையை திறந்துவைத்தார்.

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதிக்கு, திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அண்மைக் காலமாக  பல திமுக கிளைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, நான் அதிக நேரம் பேசமாட்டேன், பேசுறத விட செயல்ல காட்டுறதுதான் முக்கியம் என்று  உதயநிதி தெரிவித்தார்.

Udayanidhi stalin ask nanguneri constituency for dmk

எனக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக நாளிதழ்கள், ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
இந்த நேரத்தில் தலைவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எந்தப் பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்த்து நான் பிரச்சாரம் செய்யவில்லை. திமுகவின் கடைக்கோடி தொண்டர்களில் ஒருவன் என்ற ஒரு பொறுப்பு போதும். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கடுமையாக உழைத்து முதலமைச்சராககுவதுதான்  எனது முதல் வேலை என தெரிவித்தார்.

Udayanidhi stalin ask nanguneri constituency for dmk

தொடர்ந்து பேசிய அவர், திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரை நோக்கி, “நாங்குநேரி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரவுள்ளது. அதனை திமுகவுக்கு விட்டுக்கொடுத்தால் நாங்கள் எளிதாக வெற்றிபெற்று விடுவோம். இது ஒரு கோரிக்கைதான்” என்றும் வலியுறுத்தினார்.

Udayanidhi stalin ask nanguneri constituency for dmk

வரும் தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், அதற்காக கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசி கூட்டணி கட்சித் தலைவர்கள் அதிர வைத்தார்.  

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆகி விட்டதால் தனது எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்தார், அந்த தொகுதியில்  பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், உதயநிதியின் இந்த கோரிக்கை  காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios