Two MLAs from the ADMK welcomed TTV Dinakaran

ஆர்.கே.நகர் இடைதேர்தலின் பிரமாண்ட வெற்றிக்குபின் சட்டசபைக்கு க்கு வந்த சுயேச்சை வேட்பாளர் தினகரனை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

ஆர்.கே நகர் தேர்தலில் 89,013 வாக்குகள் பெற்று அபாரமாக வெற்றிபெற்றார் தினகரன் இன்று முதல் முறையாக இன்று சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்த டிடிவி தினகரனுக்கு, அதிமுகவை சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் வரவேற்பு அளித்து எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் வர அனுமதிக்கப்படாத நிலையில், சிங்கிள் சிங்கமாக தினகரன் இன்று சபைக்குள் உட்கார்ந்திருக்கிறார்.

வழக்கம்போல சில நிமிடங்களிலேயே எதிர்ப்பு கூச்சல் போட்டுவிட்டு வெளியேறியது ஸ்டாலின் &கோ ஆனால், தினகரன் வெளிநடப்பு செய்யவில்லை. சட்டசபையில் தினகரனுக்கு 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அவை நிகழ்வுகளை கவனித்து வருகிறார். முதல்முறையாக சபைக்கு வந்ததால் மிகவும் அமைதியாக காணப்பட்ட அவர் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சட்டசபை நிகழ்வுகளை குறித்த புத்தகத்தை அவர் படித்துக் கொண்டு இருந்தார்.

மேலும், தினகரன் சட்டசபைக்குள் வந்ததும் எடப்பாடி அணிக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் நடந்தது. அதிமுகவில் தனக்கு ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் ஸ்லீப்பர் செல்களுக்கு சார்ஜர் போடுவேன் என ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இன்று சட்டசபைக்குள் தினகரன் வந்ததும், ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் தினகரனை வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்தனர். எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட பின் சட்டசபைக்கு முதல் முறையாக வந்ததால் தினகரனுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இந்த காட்சிகள் எல்லாம் எடப்பாடி அணிக்கு பீதியை உண்டாக்கியுள்ளது.