two mla escape

கர்நாடாகவில் கடந்த 14ஆம் தேதி சட்டமன்ற 222 தொகுதிகளுக்கு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 40 மையங்களில் நேற்று காலை எட்டு மணிமுதல் தொடங்கியது. தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அதன்பின் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. பின் காங்கிரஸ் மற்றும் மத்திய ஜனதா தளம் இரண்டின் முன்னிலையை விட பா.ஜ.க முன்னிலை வகித்தது.

இந்நிலையில் பா.ஜ.க 112 தொகுதில் வென்றால்தான் தனிப்பெரும்பாண்மை கிடைக்கும். தற்போது பா.ஜ.க104 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.இதனால் கர்நாடகத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் 78இடங்களையும் மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களையும் 3 இடத்தை உதிர் கட்சிகள் பெற்றுள்ளன. உதிர் கட்சிகளையும் தன்னோடு இருக்க பேசி உடன்படுத்திக் கொண்டார் தேவகவுடா. இதனால் காங்கிரஸ் கட்சி குலாம் நபி ஆசாத் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியது மஜத தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஒத்துழைப்பை கொடுக்கும் என அறிவித்தது.

இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் இருவர் ராஜ வெங்கடப்பா நாயக்கா மற்றும் வெங்கடராவ் நாதகவுடா இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

தற்போது எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் வாலா சந்தித்து 104 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட படிவத்தை கொடுத்து பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமைகோரியுள்ளார்.