திமன்றம் தகுதி நீக்கம் செய்ததையடுத்து அமைச்சர் பதவியை இழந்த பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் ஆகியோரின் பதவிகள் தற்போது காலியாக உள்ளன. இந்த இரண்டு அமைச்சர் பதவிகளையும் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இதற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஸ் தரப்பினரிடையே பெரும் பிளவை உருவாக்கியுள்ளது. இரு தரப்பினருமே அமைச்சர் பதவியைப் பெற முட்டிமோதி வருகின்றனர். ஆனால் இப்பிரச்சனையில் தனது முடிவே இறுதியானது என எடப்பாடி உறுதியுடன் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வாரத்துக்குள் யார்? யார்? அமைச்சர் பதவியைப் பெறப் போகிறார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவுள்ளார்.

அவர் வெளிநாடு செல்லுமுன் அமைச்சர்களை அறிவித்து அவர்களை பதவி ஏற்கவைத்துவிட வேண்டும் என்பதிலும் எடப்பாடி உறுதியுடன் உள்ளார்.

உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு மற்றும் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக  பதவி ஏற்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக சொல்கிறது.