two leaf logo to whom investigate post pond by indian election commission

இரட்டை இலை யாருக்கு என்பது குறித்த விசாரணையை வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது. 

இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது. 

மேலும் இருதரப்பும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் தரவேண்டும் என கோரி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வந்தனர். 

அக்டோபர் 31 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 10 ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியது. 

இதில் எடப்பாடி தரப்பு, ஒபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு என என 2 மணி நேரம் அனல் பறக்க வாதம் நடைபெற்றது. 

இந்நிலையில், இரட்டை இலை யாருக்கு என்பது குறித்த விசாரணையை வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.