திமுகவினர் யார் என்ன செய்தாலும் யாரும் கேட்கக்கூடாது என்றால் நீங்கள் இந்த ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியமே கிடையாது. உங்களுக்கு அப்படி இருக்கணும்னா மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.
தவெக எல்லாம் ஒரு கட்சியா? இந்த கட்சிக்கு வேலை செய்றீங்களா? என பேனர் வைக்கும் பஞ்சாயத்தில் 27 வயது தவெக நிர்வாகியை திமுக நிர்வாகிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில்,திமுக-தவெக இடையே பேனர் வைப்பதில் ஏற்பட்ட மோதலின் காரணமாக 27 வயது தவெக நிர்வாகியை திமுக நிர்வாகிகள் கட்டையை கொண்டு கடுமையாக தாக்கப்பட்டதில் அவரது வலது கண்ணில் பழத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தவெவினர் குற்றம் சாட்டியுள்ளனனர். பாதிக்கப்பட்ட அன்பழகன் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் கண்ணை சுற்றி உள்ள எலும்புகள் உடைந்துள்ளதாகவும், மருத்துவமனையிலேயே ஆறு வாரங்கள் சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்ததாக காயம் அடைந்தவரின் மனைவி கண்ணீர் ததும்ப கதறுகிறார்.
இதுகுறித்து தவெக மாவட்ட செயலாளர் தாமோதரன் கூறுகையில். ‘‘மயிலாப்பூர் 125 வது வார்டில் தவெக நிர்வாகி அன்பழகன் திமுக கட்சி நிர்வாகிகளால் அடித்து தாக்கக்கப்பட்ட சம்பவத்தால் திமுகவின் அராஜக ஆட்சி கட்டமைக்கப்படுகிறது. சோழிங்கநல்லூர், அதற்கு முன் சைதாப்பேட்டை, இப்போது இங்கே என தொடர்ந்து திமுக கும்பலால் தவெக நிர்வாகிகள் டதாக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் இதற்கு எந்த ஒரு நடவடிக்கைவில்லை. ஆளுங்கட்சிய சார்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.

தவெக எல்லா விஷயத்தை செய்தாலும் முறைப்படி அரசிடம் அனுமதி பெற்றுத்தான் செய்கிறோம். எந்த ஒரு விஷயமும் நாங்கள் போலீஸ் அனுமதி இல்லாமல் செய்வதில்லை. ஆனால், அப்படி இருந்தும் ஒரு தொண்டனை போட்டு அவங்க அடித்து அராஜாகம் செய்துள்ளனர். அன்பழகனுக்கு ஒரு பக்கம் கண்ணே திறக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் படுத்து இருக்கிறார். அவர் சரியாகி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என மருத்துவராலேயே சொல்ல முடியவில்லை.
தவெக தோழர்கள் நேற்று ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்திருக்கிறார்கள். அந்த ஏரியாவில் திமுகவினர் இருக்கும் பகுதியில் ஒரு பேனர் ஒன்றை வைத்திருக்கிறார்கள். இரவு அன்பழகன் அன்கு வந்தபோது ஏன் இந்த இடத்தில் பேனர் வைத்திருக்கிறாய் என திமுகவினர் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த அன்பழகன், போன வாரம் உதயநிதி பிறந்தநாளுக்கு பேனர் வைத்தீர்கள் அல்லவா? இப்போது நாங்கள் வைத்தால் என்ன தவறு? எனக் கேட்டிருக்கிறார். அப்போது திமுக இளைஞர்கள் ‘‘நீங்களும், நாங்களும் ஒன்றா? இந்த பேனரை அகற்ற வேண்டும்’’ எனக் கூறியுள்ளனர். அப்போது எடுக்க மாட்டேன் என சொன்னதற்கு அடித்து அந்த பேனரை எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
அப்போது தவெக நிர்வாகிகள் அனைவருமே தாக்கப்பட்டுள்ளனர். அதில் இந்த தம்பி அன்பழகன் மட்டும் பலத்த காயம் அடைந்துள்ளார். தாக்கியதில் அவருக்கு ஒரு பக்க கண்ணே போய்விட்டது. அது மட்டும் இல்லாமல் அவரை தாக்குவதற்கு கத்தியையும் எடுத்து வந்திருக்கிறார்கள. அந்த தம்பியை யாராவது வெட்டி இருந்தால் என்ன செய்வது? இது அராஜக ஆட்சி தானே. இந்தப் பகுதியில் பிறந்த ஒருவருக்கு பேனர் வைக்க அனுமதி இல்லை என்றால் இது அராஜகம் தானே’’ எனகொந்தளித்தார்.
பாதிக்கப்பட்ட அன்பழகனின் மனைவி ஐஸ்வர்யா இதுகுறித்து, ‘‘என்னோட வீட்டுக்காரர் அன்பழகன் கட்சிக்காக வேலை செய்யும் போது ‘‘தவெகவெல்லாம் ஒரு கட்சியாடா? இந்த கட்சிக்கு போய் நீங்க என்ன வேலை செய்றீங்க? நான் யாருன்னு காட்டவா? எனக் கேட்டு இருக்கிறார்கள். ‘‘ஏன்னா இந்த வார்த்தை எல்லாம் பேசுற...’’ எனக்கேட்டதற்கு ‘‘ என்ன நீ பண்ணிடுவ? நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? எனக்கேட்டு தாக்கியுள்ளனர். இவர் ஒரே நிமிஷம் நான் போன் பண்றேன் என பேசிக்கொண்டு இருக்கும்போதே அதற்குள் சுரேஷ் என்பவர் என் கணவரை தாக்க ஆரம்பித்துள்ளார். கட்டப் பஞ்சாயத்து செய்து மேலோட்டமாக வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போகாமல் சுத்துகிற ஆட்கள் அவர்கள். ‘‘நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ. நான் யார்னு காட்டுறேன்’’னு அவங்க பையன் பிலிப், அபிஷேக், சின்ன பையன் டிக்சன், பெரிய பையன் சுரேஷ், அவங்களோட சொந்தக்கார பையன் சந்தோஷ் உட்பட நாலு பேர், கூடுதலாக நாலு பேர் என வந்து அடிச்சிருக்காங்க.

என் கணவர் அன்பழகன் பேசிக்கொண்டு இருக்கும்போது பின்னால் வந்து எவனோ பெரிய கட்டை, தண்ணி பட்டு ஊற வெச்ச மரக்கிளைகளை எடுத்து மண்டையில் அடித்து இருக்கிறார்கள் அவர் திரும்பும்போது கன்னத்துல வாங்கி இருக்கிறார். அப்போது கீழே விழும் போது அவங்க பையன் டிக்சன் தடுத்து இருக்கிறார். அப்போது சுரேஷ் பெரிய கல்லை தூக்கி தலையில போட பாத்துருக்காரு. கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். இது திட்டமிட்ட பக்கா கொலை முயற்சி.
இதை நான் சும்மா விடமாட்டேன். ரெண்டு நாள் ஆகுது. எல்லா போலீசும் போன் பண்றாங்க. எல்லாத்துக்குமே நாங்கள் கம்ப்ளைன்ட் கொடுக்குறோம். எல்லா வாக்குமூலமும் இருக்கு. ஆக்சன் எடுக்கல. இந்த மாதிரி திமுக ஆளுங்க மேல கேஸ் எடுக்க மாட்டாங்க. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒரு எழவும் இல்லை. திமுகவினர் யார் என்ன செய்தாலும் யாரும் கேட்கக்கூடாது என்றால் நீங்கள் இந்த ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியமே கிடையாது. உங்களுக்கு அப்படி இருக்கணும்னா மக்களுக்கு நல்லது செய்யுங்கள். இவ்வளவு ஆயிருக்கிறது. இன்னும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை நாங்கள் சும்மா விடமாட்டோம்’’ என ஆதிரத்தை கொட்டுகிறார்.

