TTV who was residing at Mookkuppodi Samiyar
அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள டிடிவி தினகரன், திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சாமியாரை சந்திக்க, சென்னையில் இருந்து இன்று புறப்பட்டார்.‘
தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பு சூழ்நிலை உருவாகி உள்ளது. தற்போது இது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு, டிடிவி தினகரன் தரப்பினரை பெரிதும் பாதித்தது என்றே கூறலாம்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணியினர், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்திய பொதுக்கூட்டத்தில், சிசிகலா மற்றும் டிடிவி தினகரனை நீக்கி உத்தரவிடப்பட்டது.
அது மட்டுமல்லாது தனக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது என டிடிவி தினகரன் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தரை சந்திப்பதற்காக டிடிவி தினகரன், சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரன் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சாமியாரை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் டிடிவி தினகரன் இன்று திருவண்ணாமலை சென்றுள்ளதால், அரசியலில் மாற்றம் ஏதும் நிகழுமா என்று மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
