டீக்கடை நடத்தி வந்த ஓபிஎஸ் தமிழக முதலமைச்சராக  இருக்கும்போது நன்றாகப் படித்த நாஞ்சில் சம்பத் ஏன் தமிழக முதல்வராகக் கூடாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களுடன் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என 3 பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

சசிகலா குடும்பம் ஆட்சியிலும், கட்சியிலும் இருந்து முழுமையாக விலகும் வரை தர்மயுத்தம் தொடரும் என ஓபிஎஸ் தெரிவித்து வந்தார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் அண்மையில் இணைந்தன.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு ஆதரவில்லை என தமிழக ஆளுநரிடம் தெரிவித்தனர்.

தற்போது டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் புதுவை அடுத்துள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டீக்கடை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக இருக்கும்போது நன்றாகப் படித்த நாஞ்சில் சம்பத் ஏன் தமிழக முதல்வராகக் கூடாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.