Asianet News TamilAsianet News Tamil

17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

TTV support mla case today hearing in supreme court
TTV support mla case today hearing in supreme court
Author
First Published Jun 27, 2018, 6:47 AM IST


தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவை, உச்சநீதிமன்றம் இன்று (ஜூன் 27) விசாரிக்கவுள்ளது.

அதிமுகவில் டிடிவி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியை மாற்றும்படி ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர். இதை யடுத்து கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம்செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

TTV support mla case today hearing in supreme court

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்தஅமர்வில் இரு நீதிபதிகள் மாறு பட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,‘சபாநாயகர் எடுத்த முடிவு சரி யானதே; இதில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று தீர்ப்பளித்தார்.

மற்றொரு நீதிபதியான சுந்தர்,‘சபாநாயகர் எடுத்த முடிவு தவ றானது; சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது’ என தீர்ப்பளித்தார். இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தலைமைநீதிபதி கூறினார். இந்த வழக்கைவிசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார்.

TTV support mla case today hearing in supreme court

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப் பினர்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர 17 பேர் சார்பிலும் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு விடப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வழக்கில் முதலமைச்சர், துணை முதலமைச்சர்  போன்ற செல்வாக்கு பெற்ற நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் இதன் விசாரணை தமிழகத்தில் நடந்தால் நேர்மையாக நடக்காது.

மூன்றாவது நீதிபதி அளிக்கும்தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப் பட்டவர்கள் மேல்முறையீடு செய் தால் அதன் விசாரணை உச்சநீதி மன்றத்தில் தான் நடக்கும்; இதனால் வழக்கில் மேலும் தாமதம் ஏற்படும்.

உச்சநீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவது இது தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும்.எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தின் விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் ஆகியோர் பரிசீலித்தனர். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில்,வழக்கின் விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ள தால் இதில் தீர்வு ஏற்படுவது மேலும் தாமதமாகும். 17 தொகுதிகளுக்கும் புதிதாக தேர்தல் நடத்துவதும் தாமதம் ஆகும். எனவே இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்.

மூன்றாவது நீதிபதியின் பெயர்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படுவதற்கு முன் ‘வாட்ஸ் ஆப்’பில் அது பற்றிய தகவல்கள் வெளியாகிவிட்டன என்றார்.இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், வாட்ஸ் ஆப் விவகாரத்தை நாங்கள் கவனத்தில் எடுக்கப் போவது இல்லை. இந்த வழக்கை 27ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசார ணைக்கு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios