முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.,டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளனர். இதற்காக புதுச்சேலி சொகுசு விடுதியில் இருந்தது 19 எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு டி.டி.வி.தினகரனுடனான மோதல் முற்றி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

இந்தக் கடிதத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஆளுநரை டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்று சந்திக்க உள்ளார்.

நண்பகல் 12 மணிக்கு இந்த சந்திப்பது நடைபெறவுள்ளது. இதற்காக புதுச்சேரி சொகுசு விடுதில் தங்கியிருந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அங்கிருந்து சென்னை புறப்பட்டனர்.

இன்று 12 மணிக்கு ஆளுநரை சந்தித்த பின் டி.டி.வி.தினகரன் சில முக்கிய முடிவுகள் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரை அடுத்து குடியரசுத் தலைவரை சந்திப்பதா ? அல்லது நீதிமன்றம் செல்வதா என்பது குறித்து அவரது அடுத்தகட்ட நடவடிக்கையை தெரிவிப்பார் என கூறப்படுகிறது.