கட்சியில் இருந்து வைத்தியலிங்கம் எம்.பி நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து வைத்தியலிங்கம் ஆதரவாளர் தினகரனின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி கைகலப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார். 

மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் வைத்தியலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி அறிவித்தார். 

இதைதொடர்ந்து சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார். 
இந்நிலையில், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என கூறிய வைத்தியலிங்கம் எம்.பியை கட்சியில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்து பேசிய வைத்தியலிங்கம் என்னை கட்சியில் இருந்து நீக்க டிடிவிக்கு உரிமையில்லை என  தெரிவித்தார். 
இந்நிலையில், தஞ்சையில் டிடிவி ஆதரவாளர்கள் வைத்தியலிங்கத்தை நீக்கியதற்கு பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

இதைபார்த்த வைத்தியலிங்கம் ஆதரவாளர்கள் டிடிவி தினகரனின் உருவ பொம்மையை எரித்து பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.