Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா பெற்ற வெற்றியை வென்ற தினகரன்... எவ்வளவு ஒட்டு தெரியுமா? 

ttv dinakaran win at RK Nagar By poll better then jayalalithaas victory
ttv dinakaran win at RK Nagar By poll better then jayalalithaas victory
Author
First Published Dec 24, 2017, 5:29 PM IST


கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது ஆர்.கே. நகரில் போட்டியிட்ட மறைந்த முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா 96,269 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனுக்கு 56,732 வாக்குகள் கிடைத்தது. 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்று வந்ததும் 2015ஆம் ஆண்டு ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடந்தது அப்போது ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் பெற்ற வாக்குகள் 9,710. ஜெயலலிதா 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தார்.

ttv dinakaran win at RK Nagar By poll better then jayalalithaas victory

2015ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து வலுவான எதிர்கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை. சிபிஎம் வேட்பாளர் மகேந்திரன் மட்டுமே போட்டியிட்டார். எனவே ஓட்டுக்கள் மொத்தமாக கைப்பற்றினார் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல அதற்குப்பின் நடந்த 2016 சட்டசபைத் தேர்தலின் போது திமுக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, நாம் தமிழர், பாஜக என பலமுனை போட்டி நிலவியது அதனால் ஜெயலலிதாவிற்கு வெற்றி சுலபமாகவே கிடைத்தது. அதன் பிறகு ஒரு வருடத்திற்குள் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் ஜெயலலிதா இறந்ததால் அந்த தொகுதிக்கு கடந்த மார்ச் மாதம் மீண்டும் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்தானது. அதன் பின் சுமார் எட்டு மாதத்திற்கு பிறகு தேர்தலை நடத்த திட்டமிட்ட நிலையில் ஜெயலலிதா வெற்றி பெற்ற இரட்டை இலை கிடைத்தது.  ஆனால் கடந்த முறை கிடைத்த அதே தொப்பி சின்னம் கிடைக்கவில்லை ஆனாலும் மனம் தளராத டிடிவி தினகரன் எப்படியும் களத்தில் வென்றாகவேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டார்.

ttv dinakaran win at RK Nagar By poll better then jayalalithaas victory

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி நடந்த வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு ராணி மேரி கல்லூரியில் நடந்து வருகிறது.  முதல் சுற்றிலிருந்தே தினகரன் மொத்த மொத்தமாக வாக்குகளை வாங்கி முன்னிலையில் இருந்து வந்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மேஜைகளிலும் தொடர்ந்து தினகரனின் குக்கரே விசிலடித்து கொண்டிருந்தது (முன்னிலை வகித்துக் கொண்டிருந்தனர்) பிரச்னை செய்த மதுசூதனன் தரப்பினர் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். அதன்பின் ஒவ்வொரு ரவுண்டிலும் சொல்லி வைத்தாற்போல் தினகரனின் வாக்கு எண்ணிக்கை எகிறத் தொடங்கியது.

ttv dinakaran win at RK Nagar By poll better then jayalalithaas victory

வாக்கு எண்ணிக்கை மொத்தம் 19 சுற்றுகளாக எண்ணப்பட்டது.  முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 50.32% சதவிகிதம் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில்  அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 27.31% சதவிகிதம் 48,306 வாக்குகளும், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 13.9% சதவிகிதம் 24, 651 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் மேலும் டெபாசிட் இழந்துள்ளார். தமிழகத்தில் தாமரை மலர்ந்த தீரும் என மார்தட்டிக்கொண்டிருந்த பாஜக நோட்டாவோடு போட்டி போட்டு தோற்றது. நாம் தமிழர் 3500 வாக்குகள் பெற்றுள்ளது.

கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தலில் மறைந்த ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜெயலலிதா வாக்கு வித்தியாசத்தைவிட,  1,162 வாக்குகள் அதிகமாக பெற்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இடைத்தேர்தல், தமிழக வரலாற்றிலேயே இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளது இதுவே முதன் முறை கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios