ttv dinakaran will win in r.k.nagar...opinion poll result

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையம் இரண்டாவது முறையாக நடத்திய கருத்துக்கணிப்பிலும் சுயேட்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரன்தான் வெற்றி பெறுவார் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்,கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மருது கணேசும், அதிமுக சார்பில் மதுசூதனனும், டிடிவி.தினகரன் சுயேட்சையாகவும், பாஜக சார்பில் கரு.நதகராஜனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டிதயமும் போட்டியிடுகின்றனர்.

கடந்த 10 நாட்களாக இத்தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என பல தரப்பினரும் கருத்ததுக் கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மையம் என்ற அமைப்பு கடந்த 13 ஆம் தேதி கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி.தினகரன் 35.5 சதவீதம் ஆதரவு பெற்று முன்னிலையில் இருந்தார். அதற்கு அடுத்தபடியாக திமுகவின் மருது கணேஷ் 28.5 சதவீதமும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 21.3 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 4.6 சதவீதம் ஆதரவு பெற்றிருந்ததாக அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து மக்கள் ஆய்வு மையம் கடந்த 13 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை மீண்டும் கருத்துக் கணிப்பை நடத்தியது. 52 பேர் 3040 பேரை நேரடியாக சந்தித்த கருத்துக் கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த கருத்துக் கணிப்பில் டி.டி.வி.தினகரன் இன்னும் கூடுதலாக ஆதரவி பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக எடுத்த கருத்துக் கணிப்பின்படி, தினரகன் 37.4 சதவீதம் ஆதரவி பெற்று அசைக்கமுடியாக இடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் திமுகவின் மருது கணேஷ், கடந்த முறையைவிட 2.2 சதவீத ஆதரவு குறைந்து 24.3 கதவீத ஆதரவை பெற்றுள்ளார்.

இதே போன்று அதிமுக வேட்பாளர் மதுசூதனன், கடந்த முறையைவிட புள்ளி 9 சதவீதம் அதிகரித்து 22.1 சதவீத ஆதரவு பெற்றுள்ளார்.

இந்த கருத்துக் கணிப்பில் டி.டி.வி.தினகரன் அதிரடியாக 37.4 சதவீத ஆதரவு பெற்று வெற்றி பெறுவார் என ராஜநாயகம் தெரிவித்தார். அதே நேரத்தில் திமுக கிட்டத்தட்ட 2.2 சதவீதம் ஆதரவு குறைவாக பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் அதை உறுதி செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று வேட்பானர்கள் குறித்த மதிப்பீட்டில் டி.டி.வி.தினகரன் முதல் இடத்திலும், தினகரனின் குக்கர் சின்னம் பெருமளவு வாக்காளர்களை சென்றடைந்துள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.