அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு டிடிவி தினகரன் நிச்சயம் வருவார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 

நாஞ்சில் சம்பத், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் வருவார் என்று கூறினார்.

அவர் வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும், கட்சியை மேம்படுத்தும் திறமை தினகரனுக்குத்தான் உள்ளது என்று கூறினார்.

பொது செயலாளர் யார் என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது என்ற அவர், பொது செயலாளருக்கே அதிகாரம் உள்ளது என்றார்.

தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் தீர்மானித்துவிட முடியாது. ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் என அறிவித்ததில் இருந்து சேகர் ரெட்டிக்குதூக்கமில்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.