ttv dinakaran trying to comprimise sasikala pushpa
தூத்துக்குடி மாநிலங்கவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. அதிமுக வின் முக்கிய நிர்வாகியான இவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக பாராளுமன்றத்தில் புகார் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தலைமை தேர்தல் ஆணையத்தியம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் சசிக்கலா அதிமுகவின் நியமன பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வானது தவறு என்றும் கட்சியின் அடிப்படை விதிப்படி அவரது நியமனம் செல்லாது என்றும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் சசிக்கலாவை நேரடியாக எதிர்க்க தொடங்கிய அவர் ஜெயலலிதா மறைவிற்கு சசிக்கலாதான் காரணம் என்றும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வந்தார். சசிகலா புஷ்பாவின் புகார்களை எடுத்துத்தான் ஓபிஎஸ் அணியினர் கையில் எடுத்தனர்.

மேலும் மேலும் அடுக்கடுக்கான புகார்களை சசிகலாபுஷ்பா வெளியிடக்கூடாது என்பதற்காக சசிகலா தரப்பினர் சமரசம் பேசியுள்ளனர்.
அதற்கு அவர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை விடப்போவதில்லை என்பதுடன் ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகள் வெளிசத்துக்கு வரும்வரை தான் விடப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் சசிகலா புஷ்பா மீது கடும் பயத்தில் உள்ளதாக அதிமுகவினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
