ttv dinakaran troll panneerselvam for tharmayuththam

துணை முதல்வர் பதவிக்காக தர்மயுத்தத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் எடப்பாடியோடு கூட்டு சேர்ந்துவிட்டு துரோக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என சட்டமன்ற கூட்டதொடருக்குப்பின் பன்னீரை காய்ச்சி எடுத்தார் சுயேச்சை வேட்பாளர் தினகரன்.

சுயேச்சையாக ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவாக வந்த தினகரன் பதவியேற்று சட்டசபைக்கு வந்ததிலிருந்தே ஆளும் அதிமுகவுடன் எப்போது அதது அதிரடியான வாதங்களை முன் வைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில் இன்று, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோர் நடுவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இடையில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக அமைச்சர் தங்கமணியும் வக்காலத்து வாங்கியதால் அவையே கிட்டத்தட்ட முப்பது நிமிடத்திற்கு மேலாக அதகளமாக காட்சியளித்தது.

தினகரன் தன் மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டிற்கும் பதிலளிக்க முயற்சி செய்தார். ஆனால் சபாநாயகர் வழக்கம் போல அவரை பேச விடவில்லை. சபாநாயகர் பேச அனுமதி அளிக்காததால் வெளிநடப்பு செய்தார் தினகரன்.

வெளியில் வந்த தினகரன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ''நான் குடும்ப அரசியல் செய்ய முயற்சிப்பதாக ஓ.பி.எஸ் கூறுகிறார். நான் குடும்ப அரசியல் செய்யவில்லை. ஓ.பி.எஸ் தான் குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் பேசிய அவர் ஓ.பி.எஸ் சம்பந்திதான் தற்போது தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர். அதற்கு பெயர் என்ன. அவர் தான் குடும்ப அரசியல் நடத்துகிறார். இப்போது யாருக்கோ விசுவாசமாக இருக்க ஆசைப்பட்டு எங்களை எதிர்க்கிறார்.

மேலும் பேசிய அவர்; சார் சார்ன்னு பேசுனவர் தான் பன்னீர் எனவும் எங்கள் குடும்பத்தால் தான் அவர் முதலமைச்சர் சீட்டில் உட்காந்தார் பிறகு அம்மா மறைவிற்குப்பின் அவரது முதல்வர் பதவியை பறிக்கப்பட்டதால் எங்களை எதிர்த்து தர்மயுத்தம் நாடகம் நடத்தினார். முதல்வராக இருக்கும் பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களித்தார். தற்போது துணை முதல்வர் பதவிக்காக தர்மயுத்தத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் எடப்பாடியோடு கூட்டு சேர்ந்துவிட்டு துரோக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.