ttv dinakaran speak about edappadi palanichami government
முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை தூக்கி விட்டு வேறு ஒருவரை நியமிப்போம் எனவும் இல்லையேல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டோம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு இரட்டை இலை விவகாரத்தில் டிடிவி சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதுவரை பதவி ஆசையில் எடப்பாடிக்கு டார்ச்சர் கொடுத்த டிடிவியை கட்சியில் இருந்து ஒழித்து கட்ட எடப்பாடிக்கு சூழல் அமைந்தது.
அப்போது கட்சியில் இருந்து டிடிவியை ஒதுக்கி வைப்பதாக அமைச்சரவை அறிவித்தது. அதற்கு டிடிவி ஒத்துழைத்தார்.
இதையடுத்து பன்னீர் தரப்பும் எடப்பாடி தரப்பும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் நாளுக்கு நாள் இழுத்து கொண்டே சென்றது பேச்சுவார்த்தை. காரணம் தர்ம யுத்தத்தின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என ஒபிஎஸ் தரப்பு கூறினாலும் பதவி பங்கீடில் பிரச்சணை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.
எது எப்படியோ ஒரு வழியாக ஒபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவியும் மாஃபாவுக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து அணிகளை ஒன்றிணைத்தார் எடப்பாடி.
இதனிடையே வெளியே வந்த டிடிவி நானும் கட்சியில் தான் இருக்கிறேன் என கூறி அவருக்கென தனி அணியை உருவாக்கினார். அவருக்கு ஆதரவாக 40 எம்.எல்.ஏக்கள் வரை திரண்டாலும் தற்போது 20 எம்.எல்.ஏக்களே ஒட்டி கொண்டு இருக்கின்றனர்.
இதைதொடர்ந்து டிடிவி தரப்பு முதலமைச்சரை மாற்ற வேண்டும் என கூறி ஊர் ஊராக டேரா போட்டு வருகின்றனர்.
மேலும் ஆளுநரிடம் கொடுத்த நம்பிக்கையையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஆனாலும் அவர்களது பாச்சா பழிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எப்படியாது பதவியையும் கட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்ற டிடிவி எண்ணத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த டிடிவி இன்று பொங்கி எழுந்துவிட்டார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி, முதலமைச்சரை மாற்றாவிட்டால் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டோம் எனவும், எடப்பாடி தலைமையிலான ஆட்சி தமிழகத்திற்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டம் நடத்தினால், தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடங்கும் எனவும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
