ttv dinakaran says This is what I had to say in the assembly

ஆளும் அரசின் குற்றங்களை எடுத்துக்கூறும் நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்றால் ஊழல் அரசு என்று பன்னீர்செல்வம் கூறினாரே அதை ஒப்புக்கொள்கிறீர்களா என கேள்வி எழுப்ப வந்ததாகவும் ஆனால் தன்னை பேசவிடவில்லை எனவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். 

தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியது. 

இதில் கேள்விபதில் நேரங்களில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் இந்த பேரவையில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பி வருகிறார். 

அந்த வகையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி 18 எம்.எல்.ஏக்கள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மெஜாரிட்டி அரசாகவே செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 

இதற்கு பதிலளிக்க முற்பட்ட டிடிவி தினகரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து திமுகவை சேர்ந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ டிடிவி தினகரனுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு தெரிவித்தார். 

ஆனாலும் வாய்ப்பு தர சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டணி வைத்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார். 

இந்நிலையில், டிடிவி தினகரன் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,ஆளும் அரசின் குற்றங்களை எடுத்துக்கூறும் நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்றால் ஊழல் அரசு என்று பன்னீர்செல்வம் கூறினாரே அதை ஒப்புக்கொள்கிறீர்களா என கேள்வி எழுப்ப வந்ததாகவும் ஆனால் தன்னை பேசவிடவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.