இந்த வாரத்திற்குள் என் பக்கம் 40 எம்.எல்.ஏக்கள் உறுதியாக வருவார்கள் எனவும் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஒவ்வொரு நிமிடமும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 

ஒரு தரப்பு சீரியஸாக நகர்ந்து கொண்டு சென்றாலும் மறுபுறம் டிடிவி ஆதரவாளர்களை எடப்பாடி தரப்பும், எடப்பாடி ஆதரவாளர்களை டிடிவி தரப்பும் முன்னுக்கு முரணாக பேசி காமெடி செய்து வருகின்றனர். 

மக்கள் திரைப்படத்தின் காமெடியை பார்ப்பதை விட இவர்கள் செய்யும் காமெடியை தான் தற்போது ரசிக்கும் அளவுக்கு உள்ளதாக விமர்சித்து வருகிறார்கள். 

ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்ததில் இருந்து டிடிவிக்கும் எடப்பாடிக்கும் நேரடியாக போர் ஏற்பட்டு வருகிறது. 

அதாவது சசிகலாவையும் தினகரனையும் நீக்குவதாக எடப்பாடி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் டிடிவி ஆதரவாளர்கள் அடுத்து குடியரசு தலைவரை சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதனிடையே டிடிவிக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏக்களாக ஆதரவு அதிகரித்து கொண்டு செல்கிறது. எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய 19 எம்.எல்.ஏக்களை தொடர்ந்து தற்போது டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஐ தொட்டுள்ளது. 

இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த டிடிவி தினகரன் இந்த வாரத்திற்குள் என் பக்கம் 40 எம்.எல்.ஏக்கள் உறுதியாக வருவார்கள் எனவும் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.