ttv dinakaran press meet

இரட்டை இலை சின்னத்தை போராடி மீட்போம்… சபதம் செய்தார் டி.டி.வி.தினகரன்…

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளது என்றும், ஜெயலலிதாவைப் போல் போராடி சின்னத்தை மீட்போம் என்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகார சண்டையால் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என. இரண்டாக பிளவுபட்டது.

இந்நிலையில் ஆர்,கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

ஆனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியதோடு, அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் போதுச் செயலாளர் தினகரன், இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருப்பது தற்காலிகமானது தான் என்றும். ஜெயலலிதா போல் இரட்டை இலை சின்னத்தை போராடி பெறுவோம் என்றும் தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்த தினகரன், ஏற்கனவே தான் சொன்னது போல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை என்றும், இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எங்களுக்கு ஓர் அனுபவம் தான் என்றும் இவ்விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துக் சென்று சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம் என்றும் தினகரன் தெரிவித்தார்.