அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்’ என்று பெயர் வைத்துவிட்டு அம்மா பாணியைப் பின்பற்றாவிட்டால் எப்படி? சில வாரங்களாகவே கழகத்தின் புகழுக்கும் குறிக்கோள்கள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்படுபவர்களை எதிரணிக்குப் போனாலும் பரவாயில்லை என்று மெல்ல களையெடுக்க ஆரம்பித்திருக்கிறார் டி.டி.வி. தினகரன். 

அந்த வரிசையில் லேட்டஸ்ட் பலிகடா அ.ம.மு.க.செய்தித் தொடர்பாளர் கே.சிவசங்கரி. இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கம் போல கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தியதாலும் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியதாலும் சிவசங்கரி கழக அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், கழக உறுப்பினர்கள் யாரும் இவரிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ  எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.