விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தை நீக்கி அப்பதவிக்கு பால சுந்தரத்தை நியமனம் செய்து அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

அதிமுக இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததில் இருந்து டிடிவி தினகரன் எடப்பாடி தரப்பு நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். 

அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் வேலுமணி ஆகியோரும் அடங்குவர்.  

அதேபோல், சைதை துரைசாமியும், அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளர். நீலகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஆர்.அர்ஜூன் நீக்கம் செய்யப்பட்டு எஸ். கலைவாணன் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், சசிகலாவுக்கு ஓடி ஓடி பேட்டியளித்த கோகுல இந்திராவும், வளர்மதியும் கூட கட்சியில் இருந்து துக்கியடிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தை நீக்கி அப்பதவிக்கு பால சுந்தரத்தை நியமனம் செய்து அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.