* அப்படியே டீலர் மூலமாக வாங்கவேண்டி வந்தாலும் விதிகளை மீறி, முகம் தெரியாத SHAN BIOTECH என்ற டீலரை அணுகியது யார்? - அவர்களை அரசுக்கு அறிமுகம் செய்தது யார்? -* ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைப்பதாக சொல்லும் முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் அந்த சீன தயாரிப்பு நிறுவனத்தை அணுகி ஒரு கருவியின் அடக்க விலை எவ்வளவு என்று கேட்கும் அடிப்படை விஷயத்தை செய்தார்களா? -* அப்படிக் கேட்டிருந்தால், வரிகள் இல்லாமல் 245 ரூபாய்க்கு வாங்கிய கருவிக்கு 355 ரூபாய் கூடுதல் லாபம் வைத்து விற்க முன்வந்த SHAN BIOTECH நிறுவனத்தை மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அனுமதித்தது ஏன்? - 

ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூ.355 கூடுதலாகக் கொடுத்து வாங்கியதில், குறைந்தபட்ச லாபத் தொகை போக மீதிப்பணத்தில் யாருக்கெல்லாம் மறைமுகமாக பங்கு போனது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிமராமத்துக்கு நிதி ஒதுக்குவது தொடங்கி கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவது வரை பணம் சம்பாதிப்பது மட்டுமே பழனிசாமி அரசின் குறிக்கோள் - மக்கள் நலன் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை என்ற குற்றசாட்டுகள் பல நேரங்களில் முன் வைக்கப்பட்டிருக்கின்றன - அவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஏப்ரல் 24-ம் தேதி வழங்கியிருக்கும் ஒரு தீர்ப்பு அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஷ்கர் மாநில அரசு இந்த ரேபிட் டெஸ்ட் கருவியை 337 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது - இதுதொடர்பாக அதே நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், தமிழக அரசு எவ்வளவு ரூபாய் கொடுத்து இந்தக் கருவிகளை வாங்கியது என்று கேட்டபோது, கடைசி வரை பதிலே சொல்லவில்லை - சுமார் ஒரு மணி நேரம் கழித்து சில ஆவணங்களை வெளியிட்டு ஒரு கருவியின் விலை 600 ரூபாய் மற்றும் 12 சதவீத ஜி.எஸ்.டி.யுடன், அதாவது 72 ரூபாய் என ஒரு கருவியை 672 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது -


* இப்போது ரேபிட் டெஸ்ட் கருவியின் பயன்பாடே நிறுத்தப்பட்ட நிலையில், 50 ஆயிரம் கருவிகளுக்காக கொள்ளையடிப்பதற்கும் சேர்த்து கொடுக்கப்பட்ட 3 கோடியே 36 லட்சம் ரூபாயின் நிலை என்ன? 
* மேலும் நான்கு லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகச் சொன்னீர்களே... அதுவும் இந்த கொள்ளை விலை அடிப்படையில்தானா? -
* அப்படி அதே விலைக்குதான் என்றால், நீதிமன்றம் குறிப்பிட்ட 400 ரூபாய் என்ற விலையைத் தாண்டி, 4 லட்சம் கருவிகளுக்கு சுமார் 8 கோடி ரூபாய் கொள்ளை நடக்க இருக்கிறதே அதற்கு என்ன பதில்? -
* கொரோனா ஊரடங்கின் காரணமாக ஒட்டுமொத்த தமிழகமும் விழிபிதுங்கி, அடிப்படை உணவுக்கு கூட வழியின்றி தவித்துவரும் நேரத்தில், இப்படி ஒரு பகல் கொள்ளையை நடத்தத் துணிந்த மனசாட்சியற்ற பழனிசாமி அரசை நோக்கி இன்னும் ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.
இவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, இப்போதாவது தனது கள்ள மௌனத்தை இந்த அரசு கைவிட்டு, என்ன நடந்தது என்பது பற்றி முழுமையான ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இதுவரை நடந்த மருத்துவ கருவிகள் உள்ளிட்ட அனைத்து கொள்முதல் விஷயங்களையும் பற்றி ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்” என்று அறிக்கையில் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.