ttv dinakaran master plan against edappadi and panneer
தினகரன் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்து அதிமுக கூடாரம் அதிர்ந்து போயுள்ளது நன்றாகவே தெரிகிறது. அடுத்து என்ன நடக்குமோ? ஆட்சி நீடிக்குமா? என்ற கவலையும் அதிகரித்துள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில் தினகரனின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துவரும் அதிமுக அமைச்சர்கள், எந்த நேரத்திலும் தினகரனின் பக்கம் சாய நேரிடும் என பீதியும் தொற்றியுள்ளதாம். இது ஒரு பக்கம் மதுசூதனன் எழுதிய தர்மயுத்தம் பார்ட் 2 கடிதம் ஒன்று அ.தி.மு.க.வை ஒட்டு மொத்தமாக அலற வைத்திருக்கிறது. முதல்வர் பழனிசாமிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் ‘எனது கேள்விகள் குறித்து திருப்திகரமான பதில்கள் இல்லையென்றால் எனது முடிவுகள் தன்னிச்சையாக இருக்கும்.’ எச்சரிக்கை மணி அடித்துல்லாது நன்றாகவே தெரிகிறது.
.jpg)
மது சூதணனின் இந்த லெட்டரு மேட்டருக்கு காரணம் பழைய பகை என சொல்லப்படுகிறது. எடப்பாடியார் டீமின் சந்தேகம் பன்னீர் செல்வமா அல்லது தினகரனா என்பதுதான். ஆனால், சசிகலாவால் மீண்டும் அமைசாரான செங்கோட்டையனின் அவை முன்னவர் பதவி, தினகரனுக்கு ஆதரவாக பேசியதால் செல்லூர் ராஜூவின் ஆட்சி மன்ற அலுவல் குழு பதவி என இரண்டையும் வாங்கிவிட்டும் வெறும் டம்மி அமைச்சர்களாக வைத்திருக்கும் பன்னீருக்கும் இந்த லேட்டேருக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. ஆட்சிக்கு நடுக்கத்தை கொண்டு வந்திருக்கும் நிலையில் மதுசூதனனும் தினகரனின் ரூட்டை பிடித்துவிட்டாரா? சந்தேகமும் வலுத்துள்ளது. அல்லது பன்னீர் ஸ்டைலில் தர்மயுத்தம் என்ற பெயரில் ஜெயலலிதா சமாதியில் மௌன விரதம் இருந்து கட்சியில் வேறு ஏதாவது எதிர்பார்க்கிறாரோ? என யோசிக்கிறார்களாம்.
.jpg)
அதுமட்டுமல்ல, எடப்படியாருக்கு பக்கம் பக்கமாக பதில் சொல்லமுடியாத கேள்விகளை கேட்டுவிட்டு மதுசூதனன் அணி மாற வாய்ப்பிருப்பதாக தெரிகிறதாம், தினகரன் தற்போதும் மதுசூதனன் மீது மரியாதை வைத்துள்ளதாகவும், மதுசூதனனை தினகரன் முக்கியமான நபராக கருத்துவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தினகரனோ நேற்று நடந்த வெளிநடப்பு சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது; மதுசூதனன் முதல்வருக்கு கடிதம் ஏழுதியிருக்கிறாரே எனக் கேட்டதற்கு மதுசூதனனே பெரிய பிராடு. அவரெல்லாம் பெரிய ஆளுனு நீங்க கேக்கறீங்க. ஆர்கே நகர் தேர்தலுக்கு காரணம் மதுசூதனன். என கூலாக கலாய்த்து தள்ளினார். ஆனால் தினகரனின் இந்த பிராடு பேச்சுக்கு இதுவரை மதுசூதனன் வாய்திறக்கவில்லை,
மூண்டு நாள் நடந்த கூட்டத்தொடரிலே தினகரனின் முகத்தை சரியாக பார்த்துகூட பேசாத அதிமுக அமைச்சர்கள் MLA’க்கள் எப்படியும் இந்த கூட்டத்தொடரிலேயே தினகரனுடன் கைகுலுக்க வாய்ப்பிறுக்குமாம், அதற்கான முதல் அறிகுறித்தான் மதுசூதனனின் திடீர் போர்க்கொடி எனவும், இதன் பின்னணியில் தினகரன் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
.jpg)
அதுமட்டுமல்ல, தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்த அவ்வழக்கு நேற்றும் தொடர்ந்தது. இந்த விசாரணையின்போது முதல்வரை மாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுத்தான் ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது அதிருப்தி கடிதம் கொடுத்தோம்.
.jpg)
எங்கள் கட்சியிலேயே மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக செங்கோட்டையனை முதல்வராக ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் ஆளுநரிடம் எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம்’’ என்று தினகரன் தரப்பின் வழக்கறிஞரான ராமன் நீதிமன்றத்திடம் தெரிவித்ததால் அலண்டு கிடக்கின்றனர் பன்னீர் அண்ட் எடப்பாடியார்.
.jpg)
அதேபோல, சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி சென்ற டிடிவி தினகரன், அங்கே செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கடந்த 30 வருட அரசியலில் செங்கோட்டையன் மிக முக்கியமானவர், மூத்தவர். அவரை அவை முன்னவர் என்ற பதவியில் இருந்து அகற்றியது ரொம்ப வருத்தமாக இருக்கிறது’’ என கொளுத்திப்போட்டார். ஆக தினகரன் வீசிய ஒரே தூண்டிலில் வசமாக மாட்டப்போவது திமிகலமா குட்டிக் குசுமானா என தெரியவில்லை எது எப்படியோ கூடிய சீக்கிரம் ஒரு பிரேக்கிங் நிச்சயம்.... அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படியும் மாறலாம்....
