ttv dinakaran emotional speech press meet at rknagar
தமிழகத்தின் முதல் மாநிலமாக ஆர் .கே .நகரை மாற்றுவேன் என்று வாக்கு சேகரிப்பின் போது டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியின் படி ஆர். கே .நகரில் வீடு இல்லாதவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுப்பேன் என்றார். மேலும் உடற்பயிற்சி கூடம் மற்றும் தொழிற்சாலைகள் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
தனக்கு அரசியல் எதிரிகளான ஓ பன்னீர் செல்வத்தின் அணியினரும் திமுகவினரும் திட்டமிட்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக வதந்தி பரப்பி வருவதாக கூறினார்.

தொப்பி போட்டவர்கள் எல்லாம் எனது அணியை சேர்ந்தவர்கள் ஆகிவிடமுடியுமா? என்றும் எனது அணியினர் ஓட்டுக்கு துட்டு கொடுத்துத்தான் ஜெயிக்க வேண்டும் என்ற நிலை தனக்கு இல்லை என்றார்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இத்தொகுதிக்கு செய்துள்ள நலத்திட்ட உதவிகள் பற்றி மக்களுக்கு தெரியும் ஆகவே அதை வைத்து தானும் வெற்றி பெறுவேன் என்று உறுதி பட கூறினார்.
