ttv dinakaran angry on thambidurai
சினிமாவில் வில்லனை ஹீரோ பழிவாங்க விரட்டு விரட்டு என விரட்டுவார். அதுபோல, நிஜத்தில் சசிகலா தரப்பை, ஓட ஓட விரட்டுகின்றனர் ஓ.பி.எஸ். தரப்பினர்.

ஆரம்பத்தில் கட்சியை பிளவுப்படுத்தியது. பின்னர், ஜெயிலுக்கே விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. அதிமுக வங்கி கணக்குகளை முடக்கியது என தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தனர் ஓ.பி.எஸ். அணியினர்.
இப்படி ஒவ்வொன்றாக கோட்டை விட்டு வந்த தனது ஆதரவாளர்கள் மீது, ஆரம்பம் முதலே கடுப்பாகி வந்தாராம் டிடிவி.

இந்த நிலையில், எது எப்படி போனா என்ன என்கிற ரேஞ்சில், திட்டமிட்ட சதி போன்று, உள்ளடி வேலைகளை செய்து விட்டதாக எண்ணுகிறாராம் தினகரன்.
காரணம் ஆர்கே நகர் தொகுதியில், தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால், முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை இழக்க நேரிடும் என்பதால், தன்னுடன் இருக்கும் சிலரே, தேர்தல் ஆணைய விவகாரத்தில் மெத்தனமாக இருந்துவிட்டதாக உறுதியாக நம்புகிறாராம்.

குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சமூகத்தை சேர்ந்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லி வட்டரத்தோடு தொடர்பில் இருப்பவர்.
இவ்வளவு பவுர்புல்லாக அவர் இருந்தும், தங்களுக்கு சாதகமான முடிவுகளை கொண்டுவர முடியவில்லை. இதனால், மிகவும் நொந்து போய்விட்டாராம் டி.டி.வி.தினகரன்.

குறைந்தபட்சம் இரட்டை விளக்கு அல்லது சேவல் சின்னம் போன்றவற்றையாவது பரிந்துரைத்து பெற்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை வாங்கி வந்தனர். இதனால், கடுப்பாகி போன அவர், எம்ஜிஆர் பயன்படுத்திய தொப்பியையாவது சின்னமாக பெறுங்கள் என சத்தம் போட்டாராம்.
ஏற்கனவே கடுப்பில் இருந்த தம்பிதுரை, தினகரன் செயலால் மேலும் கடுப்பில் உள்ளாராம்.
