கூட்டணி உடன்பாட்டின் போது சென்னையில் இருந்தும் அவர் தேமுதிக அலுவலகம் வர மறுத்துவிட்டார். ஆனால் களத்தில் தேமுதிகவினரின் நிலையை தெரிந்து கொண்ட பிறகு அவர் மனம் மாறியுள்ளார். இதனை அடுத்தே சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வந்து விஜயகாந்த், பிரேமலதாவை சந்திக்க தினகரன் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார்கள்.
செல்லும் இடங்களில் எல்லாம் திரளும் தேமுதிகவின் தொண்டர் படையை பார்த்து டிடிவி தினகரன் அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் அமமுகவுடன் தேமுதிக தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. அமமுக தரப்பில் இருந்து தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் இந்த தொகுதி உடன்பாடு செய்து கொள்ள தினகரனோ – பிரேமலதாவோ முன்வரவில்லை. தேமுதிக மற்றும் அமமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சியில் தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது. ஒரு கூட்டணி உருவானால் அந்த இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து அதனை அறிவிப்பது தான் வழக்கம். ஆனால் அமமுக – தேமுதிக கூட்டணியை அப்படி அறிவிக்கவில்லை.

இதற்கு காரணம் தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று தினகரனுக்கு தேமுதிக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம் என்கிறார்கள். பெரிய கட்சி தங்களுடைய கட்சி தான் எனவே பிரேமலதாவை அமமுக அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று தினகரன் தரப்பு வலியுறுத்தியது. இதில் இழுபறி ஏற்பட்ட காரணத்தினால் தினகரன் தனது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை தேமுதிக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இதனால் கூட்டணி உருவானாலும் கூட தாமரை இழை தண்ணீரை போல அமமுக – தேமுதிக ஒட்டியும் ஒட்டாமலேயே இருந்து வந்தது.

ஆனால் கடந்த மூன்று நாட்களாக தினகரன் பிரச்சாரம் செய்யச் செல்லும் இடங்களில் எல்லாம் தேமுதிக தொண்டர்கள் கணிசமாக குவிந்துள்ளனர். மேலும் சின்ன சின்ன கிராமங்களில் கூட தேமுதிகவிற்கு கிளைகள் இருப்பது தினகரனுக்கு தெரியவந்துள்ளது. அமமுக கூட இந்த அளவிற்கு பலமான கட்டமைப்புடன் இல்லை என்பதையும் தினகரன் உணர்ந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து தேமுதிக – அமமுக கூட்டணியை வலுவாக்க அவர் முடிவு செய்ததாக சொல்கறிர்கள். உடனடியாக தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து தேமுதிக மாவட்டச் செயலாளர்களுக்கு தேர்தல் பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவற்றுக்கு எல்லாம் மேலாக தேமுதிக அலுவலகம் வர தற்போது தினகரன் சம்மதித்துள்ளார். கூட்டணி உடன்பாட்டின் போது சென்னையில் இருந்தும் அவர் தேமுதிக அலுவலகம் வர மறுத்துவிட்டார். ஆனால் களத்தில் தேமுதிகவினரின் நிலையை தெரிந்து கொண்ட பிறகு அவர் மனம் மாறியுள்ளார். இதனை அடுத்தே சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வந்து விஜயகாந்த், பிரேமலதாவை சந்திக்க தினகரன் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார்கள். இதே போல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தேமுதிக கேட்ட ஒரு சில தொகுதிகளை ஒதுக்க தினகரன் மறுத்து வந்தார்.

ஆனால் தற்போது தேமுதிக தலைமையே நேரடியாக தொடர்பு கொண்டு தான் வேட்பாளர் அறிவித்த தொகுதியாக இருந்தாலும் அதனை தேமுதிகவிற்கு மாற்றி கொடுத்து வருகிறார் தினகரன். இதனை எல்லாம் பார்க்கும் போது கணிசமான வாக்குகளை அதிமுக கூட்டணி தவறவிட்டுவிட்டதாக தெரிகிறது.
