அதிமுக- திமுகவுக்கு நிகராக அமமுக எழுச்சி பெற்றுவருதால் டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டிடவே கூடாது என எதிர்கட்சிகள் பல்வேறு வகைகளில் சூழ்ச்சி செய்து வருகின்றன. 

குக்கர் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அதேவேளை பொதுச்சின்னம் வழங்கவும் எதிர்ப்புத் தெரிவித்ததையும் மீறி உச்சநீதிமன்றம் பொதுச்சின்னத்தை வழங்க பரிசீலனை செய்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கட்டப்பட்டதால் பெருங்குழப்பத்துடன் ஒரு மணி நேரத்திற்குள் 59 வேட்பாளர்களும் அவசர அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்தனர் அமமுக வேட்பாளர்கள். அடையாள அட்டையில் ஏற்பட்ட குழப்பத்தினால் அமமுக கடலூர் வேட்பாளர் கார்த்திக்கின் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் தான் பெயர் குழப்பத்தையும் அமமுக வேட்பாளருக்கு எதிராக கிளப்பி விட்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள். தென்காசி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதே பெயரில் சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பில் எஸ்.பொன்னுத்தாய் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். 

இவர் இத்தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜி.பொன்னுத்தாய், மா.பொன்னுத்தாய் என்ற பெயர்களில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவருமே சுயேட்சை வேட்பாளர்கள். அமமுக வேட்பாளர்கள் பெயரிலேயே சுயேட்சைகள் களமிறக்கப்பட்டு உள்ளதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு வாக்குகள் சிதற வாய்ப்புகள் உள்ளது. ஆகவே அமமுகவுக்கு விழும் வாக்குகளை சிதறடிக்க அங்கு அதிமுக கூட்டணி வேட்பாளராக களமிறங்கும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஐடியாவை அதிமுக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது