ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைவோம்.! அதிமுகவை மீட்போம்- டிடிவி தினகரன் உறுதி

ஈரோடு தேர்தலில் பண நாயகம் தான் நடைபெறுகிறது, ஜனநாயகம் இல்லையென தெரிவித்த டிடிவி தினகன் சிலர் பண மூட்டையுடன் ஈரோட்டில் முகாமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 

TTV Dhinakaran said that we will save AIADMK soon

ஈரோடு தேர்தல்-டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமமுக மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் இல்ல நிகழ்ச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  கலந்து கொண்டார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தீவரிமாக களத்தில் இறங்கி செயல்பட்டதாக கூறினார். ஆனால் தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்க மறுத்து விட்டதாக தெரிவித்தார். அதற்காக நாங்கள் நீதிமன்றம் வரை சென்று போராடி சின்னத்தை பெற்றிருக்கலாம் . ஆனால் அதெற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை. புதிய சின்னத்தை பெற்று அதில் நின்றுயிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அதனால்தான் நிற்கவில்லை என தெரிவித்தார். 

TTV Dhinakaran said that we will save AIADMK soon

ஈரோடு தேர்தலில் பண நாயகம்

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக  வாபஸ் பெற்று விட்டது. தேர்தலை சந்திக்கவில்லை என்றதும் பலர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கொண்டாடியவர்கள் தேர்தலில் டெபாசிட் இழக்காமல் இருக்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலுக்காக  சிலர் பணம் மூட்டையுடன் முகாமிட்டு உள்ளனர். ஈரோட்டில் பண நாயகம் தான் நடைபெறுகிறது. ஜனநாயகம் இல்லை என்று கூறினார். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் இணைவோம்.  அப்போது, கட்சியினை மீட்டெடுப்போம்; இரட்டை இலை சின்னம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் இருந்தபோது செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது. தற்போது எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும்போது அதன் செல்வாக்கினை இழந்து வருகிறது. | செல்வாக்கு உள்ள சின்னமாக இரட்டைலை இலை சின்னத்தை மாற்றும் காலம் வரும் என கூறினார்.

TTV Dhinakaran said that we will save AIADMK soon

விரைவில் ஜெயலலிதா ஆட்சி

ஈரோடு தேர்தலில் கணிசமான வாக்குகளை அமமுக பெற்று இருப்போம். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் நிச்சசயம் மலரச் செய்வோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

யார் இந்த கரூர் கம்பெனி? கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள் யார்? நாராயணன் திருப்பதி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios