Asianet News TamilAsianet News Tamil

திமுகவை தோற்கடிக்க அதிமுகவுக்கு மறைமுகமாக உதவும் டி.டி.வி.தினகரன்... அட, இப்படியொரு கணக்கா..?

டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.,வை கடுமையாக எதிர்ப்பதால் சிறுபான்மையினர் வாக்குகளை பெருமளவு கைப்பற்றுவார் என்றும் அது தி.மு.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

TTV Dhinakaran indirectly helps AIADMK to defeat DMK
Author
Tamil Nadu, First Published Dec 19, 2020, 2:27 PM IST

டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.,வை கடுமையாக எதிர்ப்பதால் சிறுபான்மையினர் வாக்குகளை பெருமளவு கைப்பற்றுவார் என்றும் அது தி.மு.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

அ.ம.மு.க.வுக்கு மீண்டும் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பது அந்த கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது. குக்கர் சின்னத்தை அந்த கட்சியினர் வெற்றிச்சின்னம் என்பதைவிட அதிர்ஷ்ட சின்னமாகவே கருதுகிறார்கள். ஏனெனில் 2017-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிட்டு மிகப் பெரிய வெற்றி பெற்றார். தி.மு.க., அ.தி.மு.க. இருகட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் அந்த வெற்றி அமைந்தது.TTV Dhinakaran indirectly helps AIADMK to defeat DMK

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் இணைந்து அ.தி.மு.க.வை நிலை நிறுத்தியதால் அ.ம.மு.க.வில் இருந்து சிலர் தாய் கழகமான அ.தி.மு.க.வுக்கு தாவினர். 2021 தேர்தலுக்கு முன்பு அ.ம.மு.க., அ.தி.மு.க. வுடன் இணைந்து விடும் என்று தகவல்கள் பரப்பப்பட்டது. இதனால் கட்சியில் தெய்வு ஏற்பட்டது.TTV Dhinakaran indirectly helps AIADMK to defeat DMK

இந்த நிலையில் குக்கர் சின்னத்தை மீண்டும் பெற்றிருப்பதால், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க. தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இனி கட்சியில் ஊசலாட்டத்துடன் இருந்தபடி அ.தி.மு.க.வுக்கு செல்ல யோசித்து கொண்டிருந்தவர்களும் அந்த முடிவை கைவிட்டு விடுவார்கள் என்று கருதுகிறார்கள். அதேநேரம் டி.டி.வி.தினகரன், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சிப்பதால் தேர்தல் களத்தில் வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

TTV Dhinakaran indirectly helps AIADMK to defeat DMK

அதாவது சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பா.ஜ.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எதிரானது. அதை தி.மு.க. ஒட்டு மொத்தமாக கைப்பற்றி வந்தது. ஆனால் தற்போது டி.டி.வி.தினகரன், பா.ஜ.க.,வை கடுமையாக எதிர்ப்பதால் சிறுபான்மையினர் வாக்குகளை பெருமளவு கைப்பற்றுவார் என்றும் அது தி.மு.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்கள். ஆக, மொத்தத்தில், சிறுபான்மையினர் வாக்கு எப்போதும் திமுகவுக்கு சாதகமாக இருக்கும். அந்த வாக்குகளை திமுகவுக்கு செல்ல விடாமல் தடுத்து, டி.டி.வி.தினகரன் அந்த வாக்குகளை பிரித்து தனதாக்கிக் கொண்டு, வாக்குகளை சிதைப்பதால், மறைமுகமாக  அது அதிமுகவின் வெற்றிக்கே வழி வகுக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios