Asianet News TamilAsianet News Tamil

நீங்கள்லாம் கேலி பேசுற அளவுக்கு நிலைமை மாறிப்போச்சு... கடும் மனவேதனையில் டி.டி.வி..!

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ள கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

ttv dhinakaran in great pain
Author
Tamil Nadu, First Published Jul 1, 2019, 6:39 PM IST

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ள கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ttv dhinakaran in great pain

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல.

ttv dhinakaran in great pain

அப்படி ஏதாவது கேட்க நினைத்தால் அவர் பதிவிட்டுள்ளபடி ‘நிர்வாக திறனற்ற' இந்த ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வருபவர்களிடம் கேள்வி கேட்கட்டும். அம்மா என்கிற இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழகத்தை பிறர் கேலி பேசுகிற நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் ஆளாக்கிவிட்டது வேதனை அளிக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.ttv dhinakaran in great pain

முன்னதாக மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தவிர மக்களின் சுயநலமும், மோசமான அணுகுமுறையும் கூட தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என காட்டமாக விமர்சித்திருந்தார். தமிழக அரசு பற்றியும் தமிழக மக்கள் பற்றியும் கிரண்பேடியின் விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios