நீங்கள் எப்போதும் உதவி கோர வேண்டும், அவர்கள் செய்வார்கள் என ட்ரம்பிற்கு நித்யானந்தா ஆறுதல் கூறியிருக்கிறார்.

தற்போது அமெரிக்கா, உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியிடம் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து மத்திய அரசு, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதை உறுதி செய்தது.

இதையடுத்து டிரம்ப், “அசாதாரண நேரங்களில் நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவி மறக்கப்பட மாட்டாது. உறுதியான தலைமை கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க நன்றி. இந்தப் போராட்டத்தில் நீங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மொத்த மனித குலத்திற்கும் உதவி செய்துள்ளீர்கள்,” என அமெரிக்க ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் நித்யானந்தா தனது கைலாஷா ட்விட்டர் பக்கத்தில், ‘’இப்போது சொல் வெளியே வருகிறது. உதவி கேட்கப்பட்டது. பயனற்ற சில பத்திரிகையாளர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்? அன்புள்ள நண்பரே @realDonaldTrump, நீங்கள் எப்போதும் உதவி கோர வேண்டும், அவர்கள் செய்வார்கள். உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் உதவ பரமசிவனும், சக்தியும் உடனிருப்பார்கள். -இவண்: நித்யானந்தா, பி.எம்’’ எனத் தெரிவித்துள்ளார்.