கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத்தெரிவித்து உள்ளது.

திமுகவில் முக்கியப் புள்ளியாகவும் சேப்பாக்கம் எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகன், தொழிலதிபர் சீனிவாசனை காவலில் வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பாக ஜெ.அன்ப்ழகன் உட்பட 5 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

திருப்பூர் தொழில் அதிபரான சீனிவாசனுக்கு ஜெ.அன்பழகன்ருக்கு கொலைமிரட்டல் விடுத்த இந்த வழக்கை விசாரித்து வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை மட்டும் விசாரித்து தீர்ப்பளிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில்இருந்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை விடுவிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. மறுப்பு தெரிவித்ததை அடுத்து சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணையின் போது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டும்’  என உத்தரவிட்டு ஜெ.அன்பழகனின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் ஜெ.அன்பழகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.