நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 41 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் 17 பெண்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் 2 பேர் அம்மாநிலத்தில் நன்கு அறியப்பட்ட டி.வி. மற்றும் திரைப்பட நடிகைகள்.

இதில் ஒருவர் பெயர் மிமி சக்ரபர்த்தி மற்றும்  நஸ்ரத் ஜகான் என்ற இருவர்தான் தேர்தலின் போதே இந்த மாநிலத்தைக்  கலக்கினர். இந்த இருவருக்கும் அரசியலில் துளி அளவு கூட அனுபவம் இல்லை.

இந்த நடிகைகள் இருவரும் இந்தியா முழுவதும் அறிந்த நடிகைகள் இல்லை என்றாலும், மேற்கு வங்கத்தில் நன்கு அறியப்பட்டவர்கள்.

பாஜக – இடது சாரிகள் – திரிணாமூல் காங்கிரஸ் என கடுமையான மும்முனைப் போட்டியில், நஸ்ரத் ஜகான், பாஸிர்கத் தொகுதியில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 369 வாக்குகள் கூடுதலாக பெற்று  வெற்றி பெற்றார்.

மற்றொரு  நடிகையான மிமி சக்ரபர்த்தி 2 லட்சத்து 95 ஆயிரத்து 239 வாக்குள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த இரண்டு பேரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களை அதிகம் கவர்ந்தனர்.

தற்போது இந்த இரண்டு அழகுப் புயல்களும் வரும் நாடாளுமன்றத்தில் அதி பயங்கரமாக வீசப் போகின்றன. நாடாளுமன்றம் தொடங்கியதும் அந்தப் புயல்களின் ஆட்டம் தொடங்க உள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.