Asianet News TamilAsianet News Tamil

அயோக்கியத்தனமாக பேசுகிறார் துரைமுருகன்..! அவருக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்குற நேரம் வந்துடுச்சு: வெச்சு செய்யும் காங்கிரஸின் வேலுச்சாமி..!

பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு! கூட்டம் போடாத. கெளம்பு, கெளம்பு! ....என்று சுனா பானா வாக , தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க.வுடனான தங்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார். ஆனால்  தமிழக காங்கிரஸின் நிர்வாகிகள் சிலரோ இன்னமும் அந்த நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி ஊற்றி அது அணையாமல் காப்பாற்றிட முயல்கிறார்கள். அவர்களில் ஒருவராக காங்கிரஸ் தொண்டர்களாலேயே சுட்டிக் காட்டப்படுகிறார்  திருச்சி வேலுச்சாமி. 

trichy velusamy congress speech
Author
Tamil Nadu, First Published Jan 23, 2020, 6:19 PM IST

பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு! கூட்டம் போடாத. கெளம்பு, கெளம்பு! ....என்று சுனா பானா வாக , தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க.வுடனான தங்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார். ஆனால்  தமிழக காங்கிரஸின் நிர்வாகிகள் சிலரோ இன்னமும் அந்த நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி ஊற்றி அது அணையாமல் காப்பாற்றிட முயல்கிறார்கள். அவர்களில் ஒருவராக காங்கிரஸ் தொண்டர்களாலேயே சுட்டிக் காட்டப்படுகிறார்  திருச்சி வேலுச்சாமி. 

trichy velusamy congress speech


காங்கிரஸின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக எதையும் வெட்ட வெளிச்சமாகவும், வெட்டு ஒன்ற் துண்டுகள் ரெண்டாகவும் பேசும் பழக்கமுடையவர். கட்சிக்கு எதிராக செயல்படுவது தங்களின் உச்ச நிர்வாகியாகவே இருந்தாலும் விட்டுக் கொடுப்பதில்லை இந்த அருவா வேலு! விமர்சனங்களில் வீசித் தள்ளிடுவார் சதக் சதக் என்று. அப்படிப்பட்டவர், ‘காங்கிரஸுக்கு ஓட்டு வங்கியே இல்லை’ என்று எள்ளி நகையாடிய துரைமுருகனை விட்டா வைப்பார்? பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழொன்றுக்கு வெடி பேட்டி கொடுத்திருக்கும் வேலுச்சாமி, தி.மு.க.வுக்கு எதிராக கொளுத்திப் போட்டிருக்கும் விஷயங்களின் ஹைலைட் பாயிண்டுகள் இதோ...

* கூட்டணி ஒன்றும் அரசியல் சாசனமில்லை. அரசியல் சாசனத்தையே கூட திருத்துறப்ப, கூட்டணி மாற்றங்கள் அப்படிங்கிறது சர்வசாதாரணம்தான், சாத்தியமும்தான். 

* தி.மு.க.வால்தான் எங்களுக்கு பலம்னு சொல்றதை ஏத்துக்கவே மாட்டோம். ஏன்னா அது பொய் வாதம்.  ரெண்டு பேருக்குமே தேவை இருக்குது, அதனால என்னதான் அடிச்சுக்கிட்டாலும் கடைசி நேரத்தில் இணைந்து போகவே வாய்ப்பு இருக்குது. ஆனாலும் அதற்குள் சில உண்மைகளை சொல்லியாகணும். நாடாளுமன்ற தேர்தல் வந்தால் தி.மு.க.வோடு ஒட்டி நிற்க காங்கிரஸ் முனையும். சட்டமன்ற தேர்தல் வந்தால் எங்களின் உதவி  தி.மு.க.வுக்கு வேண்டும். இப்போது வர இருப்பது சட்டமன்ற தேர்தல். எனவே நாங்கதான் அவங்களுக்கு தேவை. 

* தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு வாக்கு வங்கியே இல்லை அப்படின்னு துரைமுருகன் சொல்றார். இதன் மூலமா என்ன தெரியுது? அவரை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கணும் அப்படின்னு தெரியுது. சுய நினைவில் அவர் இல்லைன்னு நினைக்கிறேன். நினைவாற்றல் போயிவிட்ட துரைமுருகனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கிடுச்சு. ஒரு வேளை, தன் சுய நினைவில், நன்கு தெரிந்துதான் இதி அவர் சொல்லியிருந்தால் அது அயோக்கியத்தனம். 

* தி.மு.க.வில் கட்டுப்பாடு இருக்குதா?ன்னு தெரியலை. கூட்டணியில் இருக்கும் பிரதான நண்பனைப் பற்றி மோசமாக பேசிவிட்டு, ‘இது எங்கள் தனிப்பட்ட கருத்து. கட்சி, கட்சி தலைவரின் கருத்தில்லை’ என்கிறார்கள். அப்படின்னா கட்சித் தலைவரான ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் அந்த கட்சி இல்லைன்னு தெரியுது. 

* கும்மிடிப்பூண்டியை தாண்டினால் தி.மு.க.வை எவனுக்கும் தெரியாது. ஆனால் காங்கிரஸோ தேசம் முழுக்க பரவிக் கிடக்கும் கட்சி. எனவே யோசித்து பேச வேண்டியது அவர்களுக்கு அவசியம். 

* தி.மு.க. - காங்கிரஸ் இடையிலான பிரச்னை குறித்து கமல்ஹாசன் ‘இதை நான் எதிர்பார்த்தேன்’ என்கிறார். முன்கூட்டியே எதிர்பார்க்கவும், சொல்லவும் அவரென்ன ஜோஸியா? இல்லை பணிக்கரா! தன் குடும்பத்திலேயே அவரால் ஜோஸியம் சொல்ல முடியலை. பின் எதற்கு அடுத்த கட்சிகளின் விஷயத்தில் மூக்கை நுழைக்கணும்? ஒரு தியாகியின் மகன் என்ற பொறுப்போடு கமல் பேசுவது நல்லது. - என்று முடித்திருக்கிறார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இடையிலான வாய்க்கா தகராறு முடிந்துவிட்டது! என்று நினைத்தால், அக்கட்சிக்குள் இருக்கும் பெரிய மனிதர்களே அதற்கு சுபம் போடாமல் இழுத்துக் கொண்டே போவார்கள் போலிருக்கிறது. 
எது எப்படியோ நமக்கு ட்ரீட் கிடைச்சுட்டே இருந்தால் சரி!

Follow Us:
Download App:
  • android
  • ios