AIADMK: அவர்கள் பாஜகவின் கைப்பாவை.. இபிஎஸ் Vs ஓபிஎஸ்? பகீர் கிளப்பிய முன்னாள் அதிமுக பிரமுகர்
AIADMK : இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடியாது. இரண்டு கப்பலில் பயணம் செய்ய முடியாது. எனவே ஒற்றை தலைமை வேண்டும்.
பாஜக அரசு
மத்திய அரசு அண்மையில் அறிவித்த திட்டமான ‘அக்னிபத்’ திட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் நேற்று காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதன்படி, திருச்சி மாநகர மாவட்டம் காங்கிரஸ் சார்பில் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் அதிமுக பிரமுகருமான திருநாவுக்கரசர், ‘ மத்திய அரசு இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்த்து இருக்க வேண்டும். அவர்கள் அக்னிபத் திட்டம் மூலம் இந்திய ராணுவத்தை பலவீன படுத்த முயற்சிக்கின்றனர். இளைஞர்களின் எதிர்காலத்தை இந்த திட்டம் மூலம் நாசப்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
ஒற்றை தலைமை விவகாரம்
‘அதிமுக எதிர்காலம்’ குறித்த கேள்விக்கு, நான் ஜோசியக்காரன் கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அக்கட்சியில் இருந்தவன் என்ற முறையிலும், பொதுவான அரசியல்வாதி என்ற முறையில் கூறும்போது, இந்தியாவில் தேசிய கட்சியோ, மாநில கட்சியோ இரட்டை தலைமையில் செயல்படவில்லை. இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடியாது. இரண்டு கப்பலில் பயணம் செய்ய முடியாது. எனவே ஒற்றை தலைமை வேண்டும்.
இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !
அது இபிஎஸ, ஓபிஎஸ், சசிகலா என யாராக இருந்தாலும் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களில் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும். பாஜகவின் கைப்பாவையாக செயல்படக்கூடாது. பலமான எதிர்க்கட்சி தேவை. எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். நாளை ராகுல்காந்தி தலைமையில் எங்கள் ஆட்சி அமையும்போது பாஜக எதிர்கட்சியாக இருக்க வேண்டும். எனவே அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை.விரைவில் இந்த பிரச்னை முடியும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு