T.Balamurukan

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக தன்னோட கட்டுப்பாட்டில், கண் அசைவில் இயங்குகிறது என்று கொக்கரித்து வந்த தளவாய்சுந்தரத்தின் இமேஸ் பட்டென்று சரிந்த கதை தனிக்கதை.

                                                                          தளவாய் சுந்தரம்

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அதிமுக தலைமை கழகத்தில் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்கள் பற்றியும், சட்டமன்றத்தேர்தலுக்கு நாம் எப்படி பணியாற்றி வேண்டும் என்பதற்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கான ரிவியூ வரும் போது இதுவரைக்கும் தனக்கு எதிரியாக யாரும் இல்லை நானே ‘தனிக்காட்டு ராஜா’ என்று இருந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்துக்கு காத்திருந்தது எதிர்ப்பு. தனக்குஎதிராக இப்படியொரு எதிர்ப்பு வரும் என்று தளவாய்சுந்தரம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். அந்த கூட்டத்திலேயே சிலர் அவருக்கு எதிராக குரல் எழுப்பினார்கள் இதனைப்பார்த்த முதல்வர், துணை முதல்வர் ஆச்சரியத்தில் நின்று போனார்கள். தேர்தல் ஆலோசனைக் கூட்டம், தேர்தலைப்பற்றி சிந்திக்காமல் கட்சிக்காரர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த  கோஷ்டி பூசல்களை அடக்கும் முயற்சியில் பொறுப்பாளர்கள் முன்னின்றார்கள். எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த கன்னியாகுமரி மேற்கு மாவட்டச்செயலாளர் ஜான்தங்கம் செய்த முயற்சி தோல்வியடைந்தது.இதையடுத்து நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தாமல் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

                                                                                        அசோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசமன்றத்தொகுதிகளிலும் அதிமுகவுக்கு என்று ஒரு எம்எல்ஏவும் கிடையாது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தளவாய்சுந்தரத்து எதிராக ஒரு அணி இருக்கவேண்டும் என்பதற்காக தளவாய்க்கு எதிராக விஜயக்குமாரை கொம்பு சீவிவிட்டார். இவருக்கு ராஜசபா எம்பி பதவி கொடுத்தும், மா.செ பதவி கொடுத்தும் அழகுபார்த்தவர் தான் ஜெயலலிதா. ஜெயலலிதா எம்பி யாக அறிவிக்கும் வரைக்கும் விஜயகுமாரை கட்சியினர் யாருக்கும் தெரியாது. அப்படிபட்டவரைத்தான் தளவாய்க்கு எதிராக களமிறக்கினார் ஜெ.
விஜயக்குமாருக்கு இரண்டு பதவிகள் கிடைத்ததால் மாவட்டத்தில் உள்ள தளவாய் அணியையும் அனுசரித்து சென்றார். தளவாய் அனுகுமுறையை விட ,விஜயக்குமார் அனுகுமுறை தொண்டர்களுக்கு ரெம்பவே பிடித்து போனதும் தொண்டர்கள் அனைவரும் விஜயக்குமார் பக்கம் சாயத்தொடங்கினார்கள்.

                                                                                      விஜயகுமார்

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு விஜயக்குமார் அரசியலில் பின்னடைவை சந்தித்தார். அதன்பிறகு சசிகலா டிடிவி தினகரன் கையில் அதிமுக உச்சத்தில் இருந்தபோது கன்னியாகுமரிக்கு தன்னுடைய ஆதரவாளரான தளவாய்சுந்தரத்துக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக டெல்லி சிறப்பு பிரதிநிதியாக்கி அழகுபார்த்தார் டிடிவி. மீண்டும் தனக்கு அங்கீகாரம் கிடைத்ததால் மாவட்டத்தில் பலத்தோடு வலம் வரத்தொடங்கினார் தளவாய்.

                                                                                    ஜான் தங்கம்

மாவட்டச்செயலாளர் விஜயக்குமார் நடத்தும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க ஆரம்பித்தார் தளவாய். இருவருக்குமிடையே பணிப்புயல் மிக வேகமாக வீசத்தொடங்கியது.இந்த நேரத்தில் தான் ஓபிஎஸ் 'தர்மயுத்தம்' தொடங்கினார்.தன்னுடைய விசுவாசியான  குமரி மாவட்ட 'ஆவின்' சேர்மன் 'அசோகன்' ஓபிஎஸ் பக்கம் போனதை தளவாய்சுந்தரத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.எப்படியாவது எடப்பாடி அணிக்கு அசோகனை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டார் தளவாய்.இவரின் முயற்சி அன்றைக்கு கைகூடவில்லை. 2001ம் ஆண்டு பத்மநாதபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக கே.பி ராஜேந்திரபிரசாத் வெற்றி பெற்றார்.அவருக்கு மீன்வளத்துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்தார் ஜெ. இவரும் ஜெ மரணத்திற்கு பிறகு ஓபிஎஸ் அணிக்கு தாவினார். ஆக குமரி மாவட்டம் முழுவதும் அசோகன் ராஜேந்திரபிரசாத் கூட்டணி மாவட்டம் முழுவதும் கட்சிக்கூட்டங்களை நடத்தி தூள் பரத்தியது.

                                                                                                டாக்டர்.ராஜன் துரை

‘மார்சல் நேசமணி’ இவர் தாய் தமிழகத்தோடு கன்னியாகுமாரி மாவட்டம் இணைய கடுமையாக போராட்டம் நடத்தியவர். இவர் நினைவு மண்டபத்தில் உள்ள சிலைக்கு  யார் முதலில் மாலை அணிவிப்பது என ஓபிஎஸ் ,இபிஎஸ் அணியும் மோதிக்கொண்டது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அமைச்சர்கள் ம.பாண்டியராஜன், கடம்பூர்.ராஜீ ஆகியோர் வந்த வேகத்திலேயே இவர்களின் கலவரத்தை பார்த்து கிளம்பினார்கள்.இவர்களுக்கு இடையில் மத்தளம் போல் சிக்கிக்கொண்ட கலெக்டர் பிரசாத் மூவடநேரே. யின் அலுவலகத்தை, ‘அரசு நிகழ்ச்சிக்கு எங்களுக்கு அழைப்பு தரவில்லை என்று கூறி ஆவின் சேர்மன் அசோகன் நடத்திய போராட்டம் தனிக்கதை. ஓபிஎஸ், இபிஎஸ் அணி ஒன்றாக இணைந்த பிறகு இரண்டும் அணியும் ஒன்றானது.ஆனால் மா.செ பதவி இருந்து விஜயக்குமார் நீக்கப்பட்டார். குமரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு, மேற்கு என அதிமுக மாவட்டச்செயலாளர்களாக ஓபிஎஸ், இபிஎஸ் அணியை அசோகன், ஜான்தங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.தளவாய் சுந்தரம் ஒரு அணியாகவும் இரண்டு மாவட்டச்செயலாளர்களும் தனிஅணியாகவும், எம்பி விஜயக்குமார் இன்னொரு அணியாகவும்  குமரி மாவட்ட அதிமுகவில் முக்கோண  கோஷ்டி பூசல் உருவானது.


மீண்டும் தனக்கு செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்று என்னிய தளவாய் இரண்டு ம.செ க்களையும் தன்னுடைய ஆதரவாளராக மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் கிழக்கு மாவட்டச்செயலாளர் அசோகன், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மட்டும் கட்சி பதவி கொடுக்கிறார் என்றுகட்சிக்குள் மாற்று அணி உருவானது. கட்சியில் மருத்துவஅணிச்செயலாளராக இருக்கும் டாக்டர். ராஜன்துரை, ஓபிஎஸ், இபிஎஸ் தளவாய்சுந்தம் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில்  கிழக்கு மாவட்டச்செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசினார் டாக்டர். ராஜதுரை. ராஜதுரை குமரிமாவட்டத்தில் மிகப்பெரிய செல்வந்தராக வலம் வரக்கூடியவர். மா.செ பதவியை குறி வைக்கிறார் டாக்டர் என்று தெரிந்ததும், மா.செ அசோகன் டாக்டரை தடித்த வார்த்தைகளால் ஆங்காங்கே அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார். இலைமறை காயாக இருந்தது.  தோவாளையில் உழைப்பாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் மா.செ அசோகன் ‘ராஜதுரையை பார்த்து அந்த ‘நாய்’ பக்கம் யாரும் செல்லாதீர்கள் என்று பேசினார்.அதன் பிறகு இரண்டு அணியினருக்கும் இடையே கோஷ்டி பூசல் வெடித்தது. அசோகன் இப்படி பேசுவதற்கு தளவாய்சுந்தரம் தான் காரணம் என்று கருதினார் ராஜன்துரை. டாக்டர். ராஜன்துரை நடத்தும் எந்த கட்சி நிகழ்ச்சியிலும் தளவாய் சுந்தரம் படம் இடம்பெறுவதை தவிர்த்தார் ராஜதுரை.


 இந்த நிலையில் தான் முன்னாள்அமைச்சர் ராஜேந்திரபிரசாத் திடீரென இறந்துபோனார். அவர்து இறுதி சடங்கு நிகழ்ச்சி ஊர்வலம் செல்லும் போது தளவாய்சுந்தரம் ஒழிக! ஓழிக! என்று கோஷ்ங்களை எதிரணியினர் எழுப்பியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கோஷம் போட்டவரை தளவாய் ஆட்கள் அடித்து பொறித்து விட்டார்கள்.


குமரிமாவட்டத்தில் தனித்து வலம் வந்து கொண்டிருந்த தளவாய்சுந்தரம் இமேஸ் சொந்தமாவட்டதிலேயே காலிசெய்யும் அளவிற்கு எதரிர் கோஷ்டியினர் உருவாகிவிட்டதை தளவாய்சுந்தரத்தால் ஜீரணிக்கமுடியவில்லை. ஆனால் எதிர் அணியினரோ தளவாய்யை எதிர்த்து அடித்த குஷியில் குமரி மாவட்டத்திற்குள் வலம் வருகிறார்கள்.அதிமுக தலைமையும், தளவாய்க்கு சரியான போட்டி அணி உருவாகி இருப்பதை சந்தோசப்பட்டிருக்கிறதாம். இதன் மூலம் தளவாய்க்கு சொந்த ஊரில் அரசியல் செல்வாக்கு இறங்குமுகமாக சரியத்தொடங்கியிருப்பதாக உடன் பிறப்புக்கள் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். 


குமரி மாவட்டத்திற்கு புதிய மாவட்டச்;செயலாளர்கள் நியமிக்கச்சொல்லி அதிமுக நிர்வாகிகள் தொண்;டர்கள் தலைமைக்கு புகார் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.விரைவில் மாற்றம் இருக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் அதிமுகவினர்.!
இது குமரியில் நடக்கும் அதிமுக கூத்து.அளவே இல்லாமல் போச்சாம்....,