இன்று வரை எந்தவொரு தீர்க்கமான முடிவை எடுக்காததன் காரணம் என்ன? முதல்வரே தலையிடுங்க.. டிடிவி.தினகரன்..!

போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

Transport workers strike... TTV.Dhinakaran requested CM Stalin

முதலமைச்சர் தலையிட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி இணக்கமான முடிவை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், தனியார் மயமாக்கல் முடிவை எதிர்த்து, மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் திடீர் வேலை நிறுத்தத்தினால் மக்கள் துயருற்றிருப்பது வேதனையளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

Transport workers strike... TTV.Dhinakaran requested CM Stalin

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமிக்கும் தனியார் மயமாக்கல் முடிவை எதிர்த்து, மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் திடீர் வேலை நிறுத்தத்தினால் மக்கள் துயருற்றிருப்பது வேதனையளிக்கிறது.

இதையும் படிங்க;- இபிஎஸ் ஆட்சியை தூக்கி எரிந்தது எங்களால் தான்! அதேபோல உங்கள் ஆட்சியையும்!ஸ்டாலினுக்கு கெடு விதித்த வேல்முருகன்?

Transport workers strike... TTV.Dhinakaran requested CM Stalin

சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் மூலம், நாளை முதல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக வரும் செய்திகளே, இந்த முன்னறிவிப்பு இல்லாத வேலைநிறுத்தத்திற்கு முக்கியக் காரணம். 

இந்த அறிவிப்பு எழுந்தவுடனேயே, ஆளும் கட்சியின் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அதனையெல்லாம் கருத்திற்கொள்ளாமல் தனியார் மயமாக்குதலை தீவிரப்படுத்திய அரசின் நடவடிக்கைகளாலேயே மக்கள் இன்று அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க;-  டிடிவி. தினகரன் உடன் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு.. என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியில் அதிமுக..!

Transport workers strike... TTV.Dhinakaran requested CM Stalin

தனியார் மயமாக்கல் குறித்து பிரச்னை எழும்போதெல்லாம் தொழிற்சங்கங்களுடன் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று அடிக்கடி சொல்லிவரும் போக்குவரத்துத் துறை அமைச்சர், இன்றுவரை எந்தவொரு தீர்க்கமான முடிவை எடுக்காததன் காரணம் என்ன? மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, உடனே இந்த பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி இணக்கமான முடிவை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என  டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios