அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளராக இருந்த அதிமுக எம்எல்ஏ ஜக்கையன் அதிரடியாக நீக்கப்பட்டு அந்த பதவியை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 
அண்ணா தொழிற்சங்கப் பேரவை பணிகளை கவனிக்க, எம்.எல்.ஏ. ஜக்கையன் தலைமையில், கிருஷ்ணன், ராசு, சங்கரதாஸ் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப் பட்டிருந்தது. இக்குழு கலைக்கப்பட்டு அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் ராசு ஏற்கனவே வகித்து வரும் அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்.

அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலராக, எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.