Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி செய்தி... சபரிமலைக்கு சென்று வந்த பிரபல திருநங்கை அனன்யா மர்ம மரணம்..!

கேரள சட்டப்பேரவை தேர்தலில் சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்த திருநங்கை அனன்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

transgender activist ananya death
Author
Kerala, First Published Jul 21, 2021, 4:10 PM IST

கேரள சட்டப்பேரவை தேர்தலில் சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்த திருநங்கை அனன்யா  மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ். கேரள மாநிலத்தின் முதல் ஆர்.ஜே (Radio Jockey) திருநங்கையாவார். திருநங்கைகளின் உரிமைகளுக்காகக் அனன்யா குரல் கொடுத்து வந்தார். 

transgender activist ananya death

இந்நிலையில், கேரள சட்டப்பேரவை  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக போட்டியிட 28 வயதான திருநங்கை அனன்யா வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட முதல்முறையாக திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. எனினும் கட்சிக்குள்ளேயே பல பிரச்சனைகள் எழுந்ததால் வேட்பு மனுவை அனன்யா வாபஸ் பெற்றார். அதுமட்டுமல்லாமல் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து போது சபரிமலைக்கு சென்று வெற்றிகரமாக சாமி தரிசனம் செய்து முடித்து திரும்பி கவனத்தை ஈர்த்தவர்.

transgender activist ananya death

இந்நிலையில்,  கொச்சியில் உள்ள வீட்டில் இருந்த திருநங்கை அனன்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனன்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2020ம் ஆண்டு அனன்யா பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்த சிகிச்சைக்கு பின் இவருக்கு உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios