ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து சிம்பு அதிரடிப்பேட்டி அளித்ததை தொடர்ந்து, அவரது அப்பா டி.ஆர். செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவருக்கே உரிய பாணியில் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களை வறுத்த்தெடுத்தார். டி.ஆர். அவர் அளித்த பேட்டி:-

 

“எங்களால் ஜல்லிக்கட்டு நடத்த முடியும் முடியும் என்று பொன் ராதாகிருஷ்ணன் சொல்கிறார். தமிழிசை சவுந்தர ராஜன் இசை பாடுகிறார். நீங்க(பாஜக தலைவர்கள்) என்ன செய்வீங்க நமஸ்காரம் செய்வீங்க..முடிந்தால் பலகாரம் செய்வீர்கள்.எங்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். மிருகவதை என்ன மிருகவதை… இதெல்லாம் கதை… திரையில் இருக்க கூடாது ஹீரோயிசம். தரையில இருக்கணும் ஹீரோயிசம். மாட்டு சலங்கைக்காகவும் போராடுவோம்.. இலங்கைக்காகவும் போராடுவோம்.

 

ஜல்லிக்கட்டு மீதான தடை என்பது வெளிநாட்டினரின் சூழ்ச்சி. காளையை அடக்குவதுதான் எங்கள் வேலை. நாங்க மாடு பிடிக்கக்கூடாதுன்னு நீங்க ஆட்டக்கூடாது வாலை. ஒரு சி.எம். சீட்டுக்கு 16 பேர் லைன்ல இருக்காங்க. ஒற்றுமை இல்லாத்துதான் தமிழர்களோட பிரச்னை. ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் நடத்தினால் தடியடி நடத்துவீர்களா? இது கண்டிக்கத்தக்கது.

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போயஸ் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டேன். அதன்பின்னர் தமிழக எம்பிக்கள் நடவடிக்கை எடுத்தார்கள்.

மோடியை சந்திக்கச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கிள்ளுக்கீரையா? 

 

யாருக்கு தமிழ் இன உணர்வு இருக்கிறதோ அவன் தமிழன். 16ந்தேதி மாட்டுப்பொங்கல். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை கறுப்புத்துணி கட்டி தமிழர்களே போராட்டம் நடத்துங்கள்.

 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவினர் கண்ணாமூச்சி ஆடுகின்றனர். செய்வோம்.. ஆனால்னு வடிவேல் மாதிரி பேசுகிறார் பொன். ராதாகிருஷ்ணன். தாங்கிப் பிடியுங்கள் கருப்புக்கொடி. அது மத்திய அரசு மீது தமிழர்கள் காட்டும் வெறுப்புக்கொடி.” இவ்வாறு டி.ஆர். பேசினார்.