இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் கூறிய திட்டங்கள் என்ன ? இந்தியில் பேசனும் என்று மட்டுமே சொன்னார்-டி. ஆர் பாலு
இந்தியா கூட்டணியில் இந்தி பேச வேண்டும் என்று மட்டுமே நிதிஷ் கூறினார். அப்போது கூட கூட்டணிக்காக அமைதி காத்ததாக தெரிவித்த டி.ஆர் பாலு, ,பிரதமராக வேண்டும் என்று நிதிஷ் குமார் விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.
ஷாக் கொடுத்த நிதிஷ்குமார்
பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணி தொடங்கப்பட்டது. இதில் முக்கிய தலைவராக பார்க்கப்பட்டவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், திடீரென இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியோடு மீண்டும் முதலமைச்சர் ஆனார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்துள்ளேன்.
எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணிகளை நான் செய்து வந்தேன், ஆனால் மற்றவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சனம் செய்தார். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறுகையில், நிதீஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை என்றார்.
எந்த பின்னடைவும் இல்லை
திட்டமிட்டது எதுவும் இந்தியா கூட்டணியில் நடக்கவில்லை என நிதிஷ்குமார் கூறி உள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் கூறிய திட்டங்கள் என்ன எனவும் கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு இந்தி பேச வேண்டும் என்று மட்டுமே நிதிஷ் கூறினார். அப்போது கூட கூட்டணிக்காக அமைதியாக இருந்தோம் என்றவர்,பிரதமராக வேண்டும் என்று நிதிஷ் குமார் விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் கூறினார். திமுகவின் தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்கு பதில அளித்த அவர்,
எல்லா கட்சியும் அதிகமான இடங்களில் நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் நாங்கள் கூட 40க்கு 40 தொகுதிகளும் நிற்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் கூட்டணி என்று வந்தால் தொகுதிகளை பிரித்து தான் போட்டியிட வேண்டும். திமுகவும் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிற்க வேண்டும் என்று தான் என்னுடைய விருப்பம் என கூறினார்.
இதையும் படியுங்கள்
தமிழ்நாட்டு கிராமங்கள் எல்லாம் மோசமான வறுமையில் உள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை