பொய்யான தகவல் அளித்த அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு..! இறங்கி அடிக்கும் டி ஆர் பாலு
தன் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய அண்ணாமலை மீது வருகிற 8 ஆம் தேதி கிரிமினல் வழக்கு பதிவு செய்ய இருப்பதாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
திமுக- பாஜக மோதல்
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ஆம் தேதி திமுக பைல்ஸ் என்கிற பெயரில் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் 17 திமுக நிர்வாகிகளுக்கு மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவிற்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, உதயநிதி, டிஆர் பாலு உள்ளிட்டவர்கள் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை டி.ஆர்.பாலு பல நிறுவனங்களில் இயக்குனராக இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
அண்ணாமலை என்ன இசைஞானியா.! தமிழ் தாய் வாழ்த்தின் மெட்டு சரியில்லை எனக் கூற ..? சீறும் சீமான்
திமுகவினரை மிரட்டுவதா.?
அதேபோன்று, பல நிறுவனங்களில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகள் இருப்பதற்கும் ஆவணங்கள் உள்ளதாகவும், மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை சார்பாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிஆர்.பாலு, மிரட்டிப் பார்க்கும் வேலையை திமுகவினரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அதற்கெல்லாம் அஞ்சியவர்கள் தாங்கள் இல்லை. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் தன்னை தெரியும் என்றும் இப்படிப்பட்ட தன் மீது பத்தாயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக பேசுவதற்கு முன்பு அண்ணாமலை யோசித்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறினார். எனவே, அவர் மீது வரும் 8-ஆம் தேதி வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறினார். 21 கம்பெனிகள் எனது பெயரில் இருப்பதாக கூறியுள்ளார். அதில் 3 கம்பெனி மட்டுமே எனது பங்குகள் உள்ளது. எனவே முதலில் கிரிமினல் வழக்கும் அதனை தொடர்ந்து சிவில் வழக்கும் தொடரப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்