மன்னிப்பு கேட்க மாட்டேன்.. இழப்பீடும் தர முடியாது! முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்! அசராமல் அண்ணாமலை பதில்.!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி திமுக சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இழப்பீடு தர முடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது என பதில் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி திமுக சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தரப்பில் இழப்பீடு கோரி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை தரப்பில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, இழப்பீடு தர முடியாது, சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திக்க தயார் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், டி.ஆர்.பாலு அனுப்பிய நோட்டீசுக்கு வழக்கறிஞர் பால் கனகராஜ் மூலம் அண்ணாமலை பதில் அனுப்பி உள்ளார். அதில், திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை ஆதாரங்களுடன் தான் அண்ணாமலை வெளியிட்டார். யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை அவர் வெளியிடவில்லை. எனவே அவதூறு சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
பல நிறுவங்களில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகள் இருப்பதற்கும் ஆவணங்கள் உள்ளன. ஆதாரமில்லாம் எந்த குற்றச்சாட்டையும் அண்ணாமலை முன்வைக்கவில்லை. எனவே மன்னிப்பு கேட்க முடியாது. இழப்பீடும் தர முடியாது. சட்டரீதியாக இந்த வழக்கை எதிர்கொள்ள தயார் என அதில் கூறப்பட்டுள்ளது.