அண்ணாமலை மீது டி.ஆர் பாலு வழக்கு..! அடுத்தடுத்து இறங்கி அடிக்கும் திமுக- அதிர்ச்சியில் பாஜக
திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது டிஆர் பாலுவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
திமுக நிர்வாகிகள் சொத்து பட்டியல்
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், திமுக நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியில் எனக்கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் என்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், டிஆர் பாலு உட்பட 17 பேரின் சொத்து மதிப்பு 1லட்சத்து 50 ஆயிரம் கோடி என தெரிவித்திருந்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகிகள் அண்ணமாலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் 500கோடி,100கோடி, 5கோடி . 1கோடி என நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்த அண்ணாமலை, பொது தளத்தில் இருக்கும் தகவலைத்தான் வெளியிட்டேன். எனவே மன்னிப்பு கேட்க முடியாது சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க தயார் என கூறியிருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும். திமுக பொருளாளருமான டிஆர் பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை கூறியதாக தெரிவித்துள்ளார். எனவே அண்ணாமலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்