பியர் கிரில்ஸும் இந்திய பிரதமர் மோடியும் உத்தராகண்ட் மாநிலம், ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் சாகச காட்டுப் பயணம் மேற்கொண்ட 'மேன் வெர்சஸ் வைல்ட்' சிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆங்கிலம், இந்தி, வங்கம், தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் 180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் மோடி சொன்ன விஷயம் தான் இப்போது சமூகவலைதளங்களில் ஹாட் டாபிக். மோடி சிறுவனாக இருந்தபோது உள்ளூரில் இருந்த ஒரு குளத்துக்கு குளிக்கச்சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்து ஒரு முதலைக்குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்து இருக்கிறார்.

இதுபற்றி மோடி நினைவுகூர்ந்தபோது, “இது தவறு என்று என் அம்மா உணர்த்தினார்கள். நீ இதைச் செய்திருக்கக்கூடாது,
திரும்பக்கொண்டு போய் குளத்தில் விட்டு விட்டு வா என்று அம்மா சொன்னார்கள். அதன்படியே செய்தேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தோடு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானையும், மோடியையும் தொடர்புபடுத்தி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…