தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்படாததற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. அடுத்த நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கும் இதே சின்னத்தை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கமல் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்நிலையில், கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மட்டும் டார்ச் லைட் சின்னத்தை வழங்க மறுத்துள்ளது. புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அக்கட்சிக்கு மறுத்துள்ளது. மக்கள் நீதி மையம் கோரிய டார்ச் லைட் சின்னமானது, எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

 இதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் என தனது அதிருப்தியை கமல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சட்டரீதியான உச்சநீதிமன்றத்தை நாட மக்கள் நீதி மய்யம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.