நாளை டெல்லி பறக்கும் திமுக எம்.பி..க்கள்!! .எடப்பாடி அரசுக்கு எதிராக குடியரசுத் தலைரை சந்தித்து நெருக்கடி கொடுக்க திட்டம் !!!

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சி  எம்.பி.க்கள்  நாளை குடியரசுத் தலைவரை  சந்தித்து முயையிடுவார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருனிகின்றன.

ஆனால் ஆளுநர் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திமுக மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாளை டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட உள்ளனர்.

இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  தி.மு.க. எம்.பி.க்கள் மட்டுமல்ல, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் அனைவரும், இதுகுறித்து முறையிட ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம் என தெரிவித்தார்.

இதையடுத்து எம்.பி..க்களை  சந்திக்க நாளை நேரம் ஒதுக்கித்தருவதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தகவல் வந்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.