tommorrow hunger strike by prime minister Modi

நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களைவைகளை நடத்த விடாமல் எதிர்கட்சிகள் முடச்சியதைக் கண்டித்து பிரதமர்மோடிநாளை உண்ணாவிரதம்இருக்கபோவதாகஅறிவித்துள்ளார். உண்ணாவிரதம்இருந்தாலும்வழக்கம்போலதனதுவேலைகளில்ஈடுபடுவார்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம், வங்கி கடன் மோசடி, உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அதிமுக, தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி அமளியில் ஈடுபட்டன.

இதன் காரணமாக பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், பாஜக தொடங்கப்பட்ட 38 வது ஆண்டு தினத்தை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் கடந்த 23 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் போக்கை கண்டித்து வரும் 12 ஆம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். 
நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் . பிரதமர் நரேந்திர மோடியும் நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், அதே நேரத்தில் தனது வழக்கமான பணிகளையும் மோடி மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது